Last Updated : 02 Nov, 2017 04:46 PM

 

Published : 02 Nov 2017 04:46 PM
Last Updated : 02 Nov 2017 04:46 PM

ட்ரம்பின் பயணத்தால் அமெரிக்க - சீன உறவு மேலும் முன்னேற்றமடையும்: சீனா

ட்ரம்பின் சீன பயணத்தால் அமெரிக்க - சீன உறவு மேலும் முன்னேற்றமடையும் என்று அந்நாடு தெரிவித்துள்ளது.

சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைப்பை ஏற்று, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நவம்பர் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் சீனாவுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சர் லூ காங் கூறும்போது, ''சீன - அமெரிக்க உறவில் கவலை தரக் கூடிய பொதுவான விஷயங்கள் மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் பேசவுள்ளனர். ட்ரம்பின் இந்தப் பயணம் மூலம் அமெரிக்காவுடனான உறவு மேலும் முன்னேற்றமடையும் என்ற நம்பிக்கை உள்ளது'' என்றார்.

ட்ரம்பின் சீன பயணத்தில் வடகொரியாவின் அணுஆயுத ஏவுகணை சோதனைகள் முக்கிய அங்கமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, வடகொரியாவின் ஏவுகணை சோதனை விவகாரத்தில், வடகொரியாவுக்கு நெருக்கடி அளிக்குமாறு சீனாவை அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x