Published : 02 Nov 2017 09:29 AM
Last Updated : 02 Nov 2017 09:29 AM

ஜப்பான் பிரதமராக ஷின்சோ அபே தேர்வு

ஜப்பான் நாடாளுமன்ற தேர்தல் அண்மையில் நடைபெற்றது. மொத்தமுள்ள 465 இடங்களில் ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி 312 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. முக்கிய எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்கு 60 இடங்கள் மட்டுமே கிடைத்தன.

இதைத் தொடர்ந்து நேற்று நடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நாட்டின் 98-வது பிரதமரை தேர்வு செய்யும் வாக்கெடுப்பு நடைபெற்றது.

மொத்தம் 242 உறுப்பினர்கள் கொண்ட மக்களவையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஷின்சோ அபே 151 வாக்குகளைப் பெற்று மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.

வரும் 7-ம் தேதி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜப்பான் செல்கிறார். அவரை வரவேற்பதில் அபே கவனம் செலுத்தி வருகிறார். ட்ரம்ப் பயணத்தின்போது வடகொரிய விவகாரம் குறித்து முக்கியமாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x