Published : 05 Dec 2022 06:01 AM
Last Updated : 05 Dec 2022 06:01 AM

டிச.05: இன்று என்ன? - ஆத்திசூடிக்கு எளிய உரை

இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்தில் பிறந்தவர் ஆறுமுகநாவலர். ஏட்டுச்சுவடிகளை கண்டறிந்து நூல்களை பதிப்பிக்கும் பணியில் ஈடுபட்டார். இலக்கணம், சமயநூல்கள், காப்பியங்கள் என 44 நூல்களை பதிப்பித்தார். இவர் உரை எழுதிய நூல்களுள் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நல்வழி முதலான சிறுவர் இலக்கியமும் அடங்கும். பெரியபுராணம், திருவிளையாடல் புராணம், திருமுருகாற்றுப்படை ஆகியவற்றுக்கான இவரது எளிமையான உரை பரவலாக வாசிக்கப்பட்டது.

இவரது இலக்கிய சொல்லாற்றலைப் பாராட்டி திருவாவடுதுறை ஆதீனம் இவருக்கு நாவலர் எனும் பட்டத்தை வழங்கியது. அதன்பின் ஆறுமுக நாவலர் என்றே அழைக்கப்பட்டார். தமிழ் உரைநடை செவ்வியல் முறையில் வளர பங்களித்த ஆறுமுக நாவலர் 1879-ல்டிசம்பர் 5-ம் தேதி காலமானார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x