Published : 07 Sep 2022 06:01 AM
Last Updated : 07 Sep 2022 06:01 AM

செப்.07: இன்று என்ன? - பிரேசில் சுதந்திர தினம்

தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள மிகப்பெரிய நாடு பிரேசில். இதன் தலைநகர் பிரேசிலியா. பரப்பளவிலும் மக்கள் தொகையிலும் உலகில் 5-வது பெரிய நாடு.

உலக அளவில் காபி உற்பத்தியில் முதலிடம் வகி்க்கும் நாடு இதுதான். உலகிலேயே 2-வது மிகவும் நீளமான அமேசான் ஆறு இங்குதான் ஓடுகிறது.

கால் பந்தாட்டத்திற்குப் புகழ் பெற்ற நாடு. 5 முறை உலகக் கோப்பையைவென்ற சிறப்பு இதற்கு உண்டு. போர்ச்சுக்கீசியர்களின் ஆட்சியில் இருந்த பிரேசில் 1822-ம் ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி விடுதலை அடைந்தது.

பிரேசிலின் விடுதலையை இளவரசர் டொம் பெட்ரோ அறிவித்த செப்டம்பர் 7-ம் தேதி பிரேசிலின் விடுதலை நாளாக கொண்டாடப்படுகிறது. 1889-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி குடியரசு ஆனது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x