Last Updated : 08 Feb, 2024 04:30 AM

 

Published : 08 Feb 2024 04:30 AM
Last Updated : 08 Feb 2024 04:30 AM

மாற்றம் தரும் மன்ற செயல்பாடுகள்

பள்ளிகளில் செயல்படும் பல்வேறு வகையான மன்றங்கள் மாணவர்களிடமுள்ள தனித் திறனை வளர்க்கவும், பன்முகத் திறனை மேம்படுத்தவும், அறிவியல் சிந்தனை, மனிதநேயம், நாட்டுப்பற்று, நன்னெறி பண்புகள், கல்வியில் உள்ளிட்ட உயரிய விழுமி யங்களை அடைந்திடவும் வழி காட்டுகிறது.

6 முதல் 12-ம் வகுப்பு மாணவர் களுக்கு மன்றங்களின் நிர்வாக அமைப்பில் தலைமை ஆசிரியர் தலைவராகவும், சார்ந்த மன்றங்களின் பொறுப்பாசிரியர் செயலராகவும், மன்றங்களில் மாணவர் தலைவர் துணைச் செயலராகவும் குறைந்தது 25 பேர் உறுப்பினர்களாவும் இருப்பர். பாட இணை செயல்பாடு மன்றங்களில் ஆசிரிய உறுப்பினர்கள் மூவர் இடம்பெறுவர்.

கல்வி சார் மன்ற செயல்பாடுகள்: அனைத்து மாணவர்களும் மன்றசெயல்பாடுகளில் பங்கு பெற ஊக்குவிக்கப்படுகிறார்கள். சுழற்சி முறையில் ஆசிரியர்கள் மன்ற செயல் பாடுகளில் ஈடுபடுகிறார்கள். 6-12வகுப்பிற்கு மாதத்தின் முதல் வாரம் இலக்கிய மன்றமும், இரண்டாவது வாரம் அறிவியல் மன்றம் கணிதம் மற்றும் விநாடி வினா மன்றமும், மூன்றாவது வாரத்தில் சமூக அறிவியல் சார்ந்த தொன்மை பாதுகாப்பு, வாக்காளர் விழிப்புணர்வு, வரலாறு, பொருளியல், மத நல்லிணக்கம், வணிகவியல் மன்ற செயல்பாடுகளும், நான்காவது வாரத்தில் சுற்றுச்சூழல் மன்றம் மற்றும் கல்வி சாரா செயல்பாட்டு மன்றங்களும் சுழற்சி முறையில் நடைபெறுகிறது. 6-9 வகுப்புக்கு வானவில், விநாடி வினா மன்றம் செயல்படுகிறது. இதில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு பரிசுகள் விருதுகளுடன் வெளிநாடு சுற்றுலா வாய்ப்பும் உள்ளது.

கல்வி சாரா மன்ற செயல்பாடுகள்: மாதத்தின் முதல் வாரத்தில் கவின் கலை, நுண்கலை, ஓவியம், ஒரிகாமி, கைவினை செயல்பாடுகளும், இரண்டாவது வாரத்தில் சிறார் திரைப்படம், மூன்றாவது வாரத்தில் நடனம், நாடகம், கூத்துக்களை சார்ந்த செயல்பாடுகளும், நான்காவது வாரத்தில் வாய்ப்பாட்டு இசை, கருவிஇசை, பாரம்பரிய கலைகள் சார்பான செயல்பாடுகளும் மேற்கொள்ளப்படுகிறது.

குழந்தைகளின் உரிமை: சாரண, சாரணியப்படை, இளையோர் செஞ்சிலுவைச் சங்கம், முதலுதவி மன்றம், நாட்டு நலப்பணி திட்டம், பேரிடர் மேலாண்மை, தேசிய மாணவர் படை, சாலைப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மன்றம், தேசிய பசுமைப் படை, நூலகம், இதழியல் மன்றம், நுகர்வோர், குழந்தைகளின் உரிமை மற்றும் பாதுகாப்பு, செஞ்சுருள் மன்றம், போதைப்பொருள் ஒழிப்பு, நூலகம், நுண்கலை, திரைப்பட மன்றம், உயர்கல்வி வழிகாட்டி, தொழிற்கல்வி மன்றம், தகவல் தொழில்நுட்பம், கணினி நிரல், எந்திரவியல், விளையாட்டு உடல்நலம் மற்றும் சுகாதார மன்றங்கள் ஆகியன கல்வி சாரா செயல்பாட்டின் கீழ் வருகின்றன.

ஆர்வமுடன் பங்கேற்பு: கல்விசார், கல்வி சாரா மன்ற செயல்பாடுகளில் மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த மன்றங்களில் தயக்கமின்றி ஆர்வமுடன் பங்கேற்கவேண்டும். 6-12 வகுப்பு மாணவர் களுக்கு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் செயல்படும் மன்றங்கள் சிவப்பு கம்பளம் விரித்து வைத்து காத்திருக்கிறது.

மன்ற செயல்பாடுகள் பல்வேறு வகைகளிலும் உடலையும் மனதையும் பக்குவப்படுத்துகின்றன. சுற்றுச்சூழல் சார்ந்தும், மக்கள் சேவையை ஊக்குவித்து வளர்க்கிறது. நம்மிடம் உள்ளதனித் திறமையை மன்ற செயல்பாடுகள் வாயிலாக வெளிக்காட்டும் போது மேல்படிப்பில் சேரவும், வேலைவாய்ப்புக்கும் உதவுகிறது.

துடிப்புடன் செயல்படும் மன்றங்கள்ஒரு சாதாரண மாணவனையும்மாமேதையாகவோ, எழுத்தாளராக, பேச்சாளராக, கவிஞராக, கலைஞ ராக, விஞ்ஞானியாக, சமூக சேவகராக, வீரராகவோ உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.

- கட்டுரையாளர்: ஆசிரியர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, சித்தையன் கோட்டை, ஆத்தூர் ஒன்றியம் திண்டுக்கல் மாவட்டம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x