Published : 17 Jul 2023 04:21 AM
Last Updated : 17 Jul 2023 04:21 AM

ப்ரீமியம்
வெள்ளித்திரை வகுப்பறை 05: சமூக மாற்றத்துக்கான விதைகள்

கட்டுரையாளர்: பள்ளி ஆசிரியர், ‘கலகல வகுப்பறை’,‘சீருடை-ஆசிரியர்கள் குறித்த திரைப்படங்கள்’ நூல்களின் ஆசிரியர். தொடர்பு: artsiva13@gmail.com

வகுப்பறை நீராலானது. கடலாக, ஆறாக, வறண்ட மணலாக என்று பல்வேறாக மாறிக்கொண்டே இருப்பது. எப்போது வேண்டுமானாலும் திடீர் மாற்றம் ஏற்படலாம். கடினமான வகுப்பறை என்று நினைத்தது அன்று இசைவாக இருந்திருக்கும். புரிதல் உள்ள வகுப்பறை அன்று பாடாய் படுத்தியிருக்கும். வெகு சீக்கிரத்தில் வகுப்பறை வசப்பட்டுவிட்டது. மகிழ்ச்சியோடு கணக்குப் பாடத்தை எஸ்கலான்டே நடத்திக்கொண்டிருக்கிறார். பூந்தோட்டமாக தொடங்கிய வகுப்பறைக்குள் புயலென நுழைந்தனர் இரண்டு மாணவர்கள். அலட்சியமான பார்வை, நடை. கைகளில் புத்தகம், குறிப்பேடு என எதுவுமே இல்லை.

புதிய மாணவர்கள்: "நீங்கள் யார்? புதிய மாணவர் களா? அனுமதி கடிதம் எங்கே?"என்று எஸ்கலான்டே கேட்கிறார். ஒருவன் கையை உயர்த்தி அனுமதிக் கடிதத்தைக் காட்டுகிறான். அதை ஆசிரியர் வாங்கும் போதுவேண்டுமென்றே கீழே தவற விடுகிறான். ஆசிரியர் குனிந்து கடிதத்தை எடுக்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x