Published : 18 Jul 2022 06:30 AM
Last Updated : 18 Jul 2022 06:30 AM
கோவை: 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னை மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெற உள்ளன. இந்தப் போட்டியின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
"செஸ் ஒலிம்பியாட் 2022" போட்டிக்கான சின்னம் சமீபத்தில் வெளியிடப்பட்டது. ‘செஸ் தம்பி' என்ற இந்த சின்னம் தமிழக அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. செஸ் விளையாட்டில் இருக்கும் குதிரை வேட்டி கட்டிக்கொண்டு வணக்கம் கூறி வரவேற்பதை போல சின்னம் அமைந்துள்ளது.
இந்த சின்னத்தை பிரபலப்படுத்தி வருகிறது தமிழக அரசு. இந்த சூழலில் கோவை மணியகாரம்பாளையத்தில் அமைந்துள்ள கேம்போர்டு பள்ளி மாணவர்கள் செஸ் சின்னத்தை 40 அடிஉயரம் 20 அடி அகலத்தில் வண்ணவண்ண உப்பை கொண்டு வரைந்துள் ளனர். 40 மாணவர்கள் இணைந்து 2 மணி நேரத்தில் இந்த சின்னத்தை வரைந்து அசத்தியுள்ளனர்.
தமிழகத்தில் சர்வதேச செஸ்போட்டி நடைபெறுவது பெருமையளிப்பதாகவும், இதுகுறித்து மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த சின்னத்தை வரைந்ததாகவும் மாணவர்கள் தெரி வித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT