Published : 24 Jan 2023 06:02 AM
Last Updated : 24 Jan 2023 06:02 AM

தீவுத்திடல் பொருட்காட்சியில் மெட்ரோ ரயில் பயண அட்டை வாங்கினால் 20% தள்ளுபடி

சென்னை: சென்னை தீவுத்திடல் பொருட்காட்சியில் மெட்ரோ ரயில் பயண அட்டை வாங்கினால் 20% தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இதுகுறித்து சென்னை மெட்ரோரயில் நிறுவனம் தெரிவித்திருப்பதாவது: தீவுத்திடல் பொருட்காட்சியில் தமிழக அரசின் பல்வேறு அரசு துறை அரங்குகள், அரசு சார்ந்த நிறுவனங்கள், தனியார் அரங்குகள் இடம்பெற்றுள்ளன.

சென்னை நந்தனத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலக முகப்பு போலவே இங்கு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அரங்கத்தின் உள்ளே நுழையும்போது மெட்ரோ ரயிலில் ஏறுவது போலவும், அரங்கத்தை பார்வையிட்டுவிட்டு வெளியில் வரும்போது மெட்ரோ ரயில் சுரங்க பாதை தோண்டும் பிரம்மாண்ட இயந்திரத்தின் மாதிரி வடிவம் வழியாக வெளியேறும் வகையில் பாதை வடிவமைக்கப்பட்டுள்ளது. சுரங்கம் தோண்டும் இயந்திரம் எப்படி இயங்குகிறதோ அதேபோல் இந்த அரங்கம் இயங்குவதும் சிறப்பு.

மெட்ரோ ரயில் பற்றிய புகைப்படங்கள், சுரங்கம் தோண்டும் இயந்திரத்தின் மாதிரி வடிவமைப்பு, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் வரைபடம் போன்றவை இடம்பெற்றுள்ளது. பொதுமக்களின் வசதிக்காக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அரங்கில் பயண அட்டை விற்கப்படுகிறது.

பயண அட்டை வாங்குவோருக்கு 20% கட்டணத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதுவரை 183 பயண அட்டைகள் இங்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. நீரூற்று கிணறு இயற்கையாகவே சென்னை மெட்ரோ ரயில் நிறுவன தலைமை அலுவலக முன்பகுதியில் அமைந்துள்ளது. அதன் சிறப்பை எடுத்து கூறும் வகையில் இளைஞர்கள் கிணறு பற்றி தெரிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x