Published : 31 Oct 2022 06:14 AM
Last Updated : 31 Oct 2022 06:14 AM

பாகிஸ்தான் தோல்வி கண்டது ஏன்? - சுனில் கவாஸ்கர் கருத்து

மும்பை: டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் தொடர்ந்து 2 தோல்விகளைப் பெற்றது ஏன் என்பது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில்கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றின் முதல் 2 ஆட்டங்களில் பாகிஸ்தான் தோல்வி கண்டது. நேற்று நடைபெற்ற 3-வது ஆட்டத்தில் நெதர்லாந்தை, பாகிஸ்தான் வென்றது.

முதல் 2 போட்டிகளில் பாகிஸ்தானின் தோல்வி குறித்து சுனில் கவாஸ்கர் கூறியதாவது: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக உள்ளது. ஆனால் அந்த அணியின் நடுவரிசை பேட்டிங் பலவீனமாக உள்ளது. இதற்கு முன் பாகிஸ்தான் ஆடிய டி20 போட்டிகளில் ஃபகர் ஜமான் 3 அல்லது 4-ம் வரிசையில் பேட்டிங் ஆடினார். தற்போதைய டி20 உலகக் கோப்பையில் அவர் ஆடவில்லை. அவருக்குப் பதிலாக ஷான் மசூத் 3ம் வரிசையில் நன்றாக விளையாடி வருகிறார். ஆனால்பாகிஸ்தான் அணி தேர்வு சரியில்லை. ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் சிறப்பாக செயல்படக்கூடிய வேகப்பந்து வீச்சாளர் முகமது வாசிம்கண்டிப்பாக அணியில் இடம் பெறவேண்டும். ஜிம்பாப்வேவுக்கு எதிராக அவர் அபாரமாக பந்துவீசினார்.

பேட்டிங்கிலும் சிறப்பாக பரிமளிக்கக் கூடியவர் அவர். மிகத்திறமையான வீரர் முகமது வாசிம் என்பதில் சந்தேகமில்லை. இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா போன்ற முகமது வாசிமை, இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஆடவைக்கவில்லை. 2 சுழற்பந்து வீச்சாளர்களுடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. வாசிம் போன்ற வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாடியிருந்தால் பாகிஸ்தான் வெற்றி பெற்றிருக்கலாம். தொடர்ந்து 2 போட்டிகளில் அந்த அணி தோல்வி கண்டதற்கு இதுவே காரணம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x