Published : 16 Aug 2022 06:06 AM
Last Updated : 16 Aug 2022 06:06 AM

கோவை | 10 நிமிடங்களில் 50 ஆங்கில பாடல்கள்: மாநகராட்சி பள்ளி மாணவி சாதனை

கோவை: கோவை ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் - ஷாலினி தம்பதியின் மகள் இனியா(5). மசக்காளிபாளையத்தில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் யு.கே.ஜி படித்து வரும் இனியா அனைத்து வகை காய்கறிகள், பழங்கள், நிறங்கள் மற்றும் பொருட்களின் பெயர்களை சரியாக கூறி அசத்துகிறார். 10 நிமிடங்களில் 50 ஆங்கில பாடல்களை பாடி "இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்” புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

இதுகுறித்து மாணவி இனியா கூறும்போது, ‘‘எனது பள்ளி ஆசிரியர்களும், பெற்றோரும் அளித்த பயிற்சியின் காரணமாக என்னால் அனைத்து பாடல்களையும் ஞாபகம் வைத்துக்கொள்ள முடிகிறது. மேலும் பல சாதனைகளை செய்யும் ஆசை உள்ளது’’ என்றார்.

இந்நிலையில், கோவை மாநகராட்சிபிரதான அலுவலகத்தில் நடைபெற்றசுதந்திர தின விழாவில், இனியாவின்சாதனையை பாராட்டி கையடக்கக் கணினியை மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் ஆகியோர் வழங்கினர். துணை மேயர் வெற்றிச் செல்வன், துணை ஆணையர் ஷர்மிளா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x