Published : 27 Jul 2022 06:12 AM
Last Updated : 27 Jul 2022 06:12 AM
திருப்பூர்: பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது.
இக்கூட்டத்தில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறுகையில், “தற்போதைய சூழலில் மன அழுத்தம் காரணமாக பள்ளி மாணவ, மாணவிகள் விபரீத முடிவுகளை எடுக்கிறார்கள்.
இந்நிலையில், தன்னம்பிக் கையை ஏற்படுத்தும் விதமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் ஒரு திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
அதன்படி, . 413 பகுதிகளாக கல்வி ஒன்றியங்கள் பிரிக்கப்பட்டு. ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் 2 மருத்துவர்கள் என 800 மருத்துவர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அவர்கள் தங்களது பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுக்கு கவுன்சிலிங் அளிப்பார்கள்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT