Published : 21 Jul 2022 06:20 AM
Last Updated : 21 Jul 2022 06:20 AM

உணவு கழிவிலிருந்து ‘சிமெண்ட்' தயாரிப்பா?

‘‘உணவை வீணாக்காதீர்’’ என்ற வாசகத்தை அன்றாடம் நாம் பல இடங்களில் பார்த்திருப்போம், படித்திருப்போம், கேட்டும் இருப்போம். ஆனால், கடைபிடிக்கிறோமா என்று கேட்டால், இல்லை என்ற பதிலே பெரும்பாலும் வரும்.

உலகில் உள்ள மக்களில் கோடிக்கணக்கானோர் மூன்று வேளைஉணவு கிடைக்காமல் இருக்கின்றனர். இந்த நிலையில், அளவுக்கு அதிக மான உணவு தினந்தோறும் வீணாக்கப்படுவது என்பது யாராலும் ஒப்புக்கொள்ள முடியாத ஒன்று.

கடந்த 2019-ம் ஆண்டு, ஜப்பானில் மட்டுமே 5.7 டன் உணவு வீணாகியிருந்தது. இதனை, 2030-ம்ஆண்டு 2.7 டன்னாகக் குறைப்பதற்கு அரசு பல திட்டங்களைத் தீட்டியுள் ளது. டோக்கியோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், உணவுக் கழிவுகளை வைத்து சிமெண்ட் தயாரிக்கும் புதிய முறையைக் கண்டறிந்துள்ளனர்.

இந்த சிமெண்ட்டை பயன்படுத்து வதன் மூலம் உலகின் வெப்ப நிலை குறைக்கப்படும் என்றும், சாதாரணமான செயல்முறைகளைக் கொண்டு கான்கிரீட் தயாரிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளனர். மரத்துகள்களை உலரவைத்து, பொடியாக்கி, அடைப்பதன் மூலம்கான்கிரீட் தயாரிக்கலாம் என்கின்ற னர். இந்த முறையையே உணவுக் கழிவுக்கும் பயன்படுத்தி பலமுறை தோல்வி கண்டனர்.

உணவுக்கழிவு என்பது பல வகையான உணவுகளைத் தன்னுள் கொண்டது.

"ஹீட் ப்ரெஸ்ஸிங் கான்செப்ட்" எனப்படும் செயல்முறையில் சீரான அழுத்தமும், வெப்ப நிலையும் இருத்தல் அவசியம். இந்த வேலை மிகவும் கடினமாக இருந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். தேயிலைகள், காப்பி கழிவுகள், சீனாவின் முட்டைகோஸ், ஆரஞ்சு, வெங்காய தோல் முதலான ஏராளமான கழிவுகள் பயன்படுத்தப்பட்டன.

இந்த கான்கிரீட்டை வாட்டர் ப்ரூப் ஆக்குவதற்கும், பூச்சிகள் அரிக்காமல் பாதுகாக்கவும், கடைசியாக இதன்மேல் அரக்கு பூசப்படுகிறது.

உணவாக மாற்றப்படும் உணவு கழிவு

உணவுக்கழிவில் செய்யப்படும் கான்கிரீட், மீண்டும் உண்ணக்கூடிய தன்மை கொண்டது. பேரிடர் காலங்களில், உணவுக்குப் பஞ்சம் ஏற்பட்டால், இதை உடைத்து, வேகவைத்து சாப்பிடலாம் என்றும், இதனால் எளிதாக உயிர்கள் காக்கப்படும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x