Published : 21 Jul 2022 06:48 AM
Last Updated : 21 Jul 2022 06:48 AM

அப்துல்லா ஷபீக்கின் அபாரமான ஆட்டத்தால் முதல் டெஸ்டில் இலங்கையை வீழ்த்தியது பாக்.: 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி

காலே: அப்துல்லா ஷபீக்கின் அபாரமான ஆட்டத்தால் இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பாகிஸ்தான் அணி.

காலே நகரில் நடைபெற்று வந்த இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை 222 ரன்களும் பாகிஸ்தான் 218 ரன்களும் எடுத்தன. 2-வது இன்னிங்ஸில் இலங்கை 337 ரன்கள் குவித்தது. இதைத் தொடர்ந்து 342 ரன்கள் இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் அணி 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 85 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 222 ரன்கள் எடுத்தது.

இமாம் உல் ஹக் 35, அஸார் அலி 6, பாபர் அஸாம் 55 ரன்களில் ஆட்டமிழந்தனர். அப்துல்லா ஷபீக் 112, மொகமது ரிஸ்வான் 7 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி 127.2 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 344 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

அப்துல்லா ஷபீக் 408 பந்துகளில், ஒரு சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 160 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய மொகமது நவாஸ் 19 ரன்கள் சேர்த்தார். முன்னதாக ரிஸ்வான் 40, சல்மான் 12, ஹசன் அலி 5 ரன்களில் ஆட்டமிழந்தனர். 4

விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது டெஸ்ட் போட்டி வரும் 24-ம் தேதி தொடங்குகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x