Published : 20 Jul 2022 06:17 AM
Last Updated : 20 Jul 2022 06:17 AM

ஹிட்லர் கைக்கடிகாரம் ஏலத்துக்கு வருகிறது

வாஷிங்டன்: அடால்ப் ஹிட்லரின் கைக்கடிகாரம் அமெரிக்காவில் ஏலத்திற்கு வைக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியின் சர்வாதிகாரியாக இருந்த ஹிட்லர் பயன் படுத்திய கைக்கடிகாரம் ஏலத்துக்கு வைக்கப்பட்டுள்ளது. ஹிட்லரின் இந்த கைக்கடிகாரத்தை அலெக்சாண்டர் ஹிஸ்டோரிகல் என்ற நிறுவனம் ஏலம் விடுகிறது. அந்த கைக்கடிகாரத்தில் மூன்று தேதிகள் உள்ளன.

ஹிட்லருடைய பிறந்தநாள், அவர் ஜெர்மன் நாட்டின் அதிபராக நியமனம் செய்யப்பட்ட நாள், 1933 ஆம் வருடத்தில் நாசிப்படை தேர்தலில்வென்ற நாட்கள் உள்ளன. இந்த கைக்கடிகாரம் சுமார் 2 முதல் 4 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் போகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரலாற்று ஆய்வாளர்கள், நிபுணர்கள் இந்த கைக்கடிகாரத்தை ஆராய்ந்து அது ஹிட்லருடைய கைக்கடிகாரம்தான் என்பதை உறுதி செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x