

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான இணையவழி தேர்வு,ஜன.29 முதல் பிப்.6 வரை நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஆசிரியர்தேர்வு வாரியத் தலைவர் ஜி.லதாநேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள், கடந்த செப்.18 முதல் நவ.14 வரை பெறப் பட்டன. அந்த நேரத்தில் கணினிவழி தேர்வு தேதி அறிவிக்கப் படவில்லை.
தற்போது, முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான கணினிவழி தேர்வை ஜன.29 முதல் பிப்.6-ம் தேதி வரை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு பெருந்தொற்று சூழ்நிலை, தேர்வு மையங்களின் தயார்நிலை மற்றும் நிர்வாக வசதியைப் பொறுத்து மாறுதலுக்கு உட்பட்டது. விரிவான தேர்வு காலஅட்டவணை தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்பாக வெளியிடப் படும்.
இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்து.