Published : 11 Nov 2021 03:07 AM
Last Updated : 11 Nov 2021 03:07 AM

குழந்தைகள் தினத்தையொட்டி ‘இந்து தமிழ் திசை' சார்பில் ‘கோடத்தான்’ ஆன்லைன் விநாடி-வினா போட்டி: நவ. 14-ம் தேதி நடைபெறுகிறது

வினோத்குமார்

சென்னை

குழந்தைகள் தினத்தையொட்டி ‘இந்து தமிழ் திசை' சார்பில் கோடத்தான் (Codeathon) ஆன்லைன் விநாடி-வினா (க்விஸ்) போட்டி வரும் 14-ம் தேதி காலை 11 மணி முதல் 12 மணி வரை நடைபெற உள்ளது.

நவீனகால முக்கியத் திறன்களில் ஒன்றான கோடிங், தற்போது கம்ப்யூட்டர் ப்ரோகிராமிங்-ல்முக்கியப் பங்காற்றுகிறது. கம்ப்யூட்டர்களுடன் மனிதர்கள் தொடர்புகொள்வதற்கான மொழியாகவும் கோடிங் விளங்குகிறது.

கோடிங் மூலம் மாணவர்கள் கம்ப்யூட்டர்களை இயக்கும் ப்ரோகிராம்களை உருவாக்கக் கற்றுக்கொள்ளலாம் என்பதுடன், அவர்களது படைப்பாற்றல் வெளிப்படவும் வழிவகுக்கும் வகையில் ஹெச்டி கோடத்தான் கோடிங் திறன் பயிற்சியை ‘இந்து தமிழ் திசை' நாளிதழ் நடத்த உள்ளது.

வருங்கால மாணவர்களுக்குப் பயனளிக்கும் இந்தப் பயிற்சியில் சேருவதற்கான மாணவர்களை அடையாளம் காணும்வகையில் நடத்தப்படும் இந்த கோடத்தான் ஆன்லைன் விநாடி-வினா போட்டியில், 4 முதல் 9-ம் வகுப்பு வரைபயிலும் மாணவ, மாணவிகள்அனைவரும் கலந்துகொள்ளலாம்.

இந்தப் போட்டியை பல்லாண்டுகால அனுபவமிக்க லேர்னிங் மாஸ்டர் வினோத்குமார் நடத்த உள்ளார். இதில் பங்கேற்க கட்டணம் ஏதுமில்லை. பங்கேற்க விரும்புவோர் https://www.htamil.org/00111 என்ற லிங்க்-ல் பதிவுசெய்து கொள்ளலாம். இந்த விநாடி-வினா போட்டியை https://www.htamil.org/00113 என்ற லிங்க்-ல் காணலாம். கூடுதல் விவரங்களுக்கு 900396 6866 என்ற செல்போன் எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x