Published : 07 Nov 2021 03:06 AM
Last Updated : 07 Nov 2021 03:06 AM

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஓரிகாமி ஆன்லைன் பயிலரங்கம்: நவ.12, 13, 14-ல் நடைபெறுகிறது

சென்னை

பள்ளி மாணவ-மாணவிகள் ஆன்லைனில் பங்கேற்று பயன்பெறும் வகையில், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், பெருந்துறை நிவேதா கலை மற்றும் கைவினைக் கழகத்துடன் இணைந்து நடத்தும் ஓரிகாமி ஆன்லைன் பயிலரங்கம் நவ.12-ல் தொடங்கி 3 நாட்கள் நடைபெற உள்ளது.

அனைத்து மாணவர்களுக்கும் பயனளிக்கும் விதமாக, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் பல்வேறு செயல்பாடுகளை ஆன்லைனில் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, ஓரிகாமி ஆன்லைன் பயிலரங்கை நவ.12, 13, 14 ஆகிய 3 நாட்கள்நடத்த உள்ளது. தினமும் மாலை6.00 முதல் 7.00 மணி வரை நடைபெறும் இந்த பயிலரங்கில் 3-ம்வகுப்பு படிக்கும் குழந்தைகள் முதல் அனைவரும் பங்கேற் கலாம்.

ஓரிகாமி பயிலரங்கை நடத்தவுள்ள நிர்மல் குமார், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஓரிகாமி பயிற்சிகளைத் திறம்பட நடத்தி வருபவர். இந்த பயிலரங்கில் 10-க்கும் மேற்பட்ட கைவினைப் பணிகளை மாணவர்களுக்கு கற்றுத்தர உள்ளார்.

பதிவுக்கட்டணம் ரூ.249

இதில் பங்கேற்க விரும்புபவர்கள் https://www.htamil.org/00105 என்ற லிங்க்-கில் ரூ.249/- பதிவுக் கட்டணம் செலுத்தி, பதிவு செய்யவேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு 9003966866 என்ற செல்பேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், பெருந்துறை நிவேதா கலை மற்றும் கைவினைக் கழகத்துடன் இணைந்து நடத்துகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x