Published : 03 Sep 2021 03:14 AM
Last Updated : 03 Sep 2021 03:14 AM

2021-ம் ஆண்டின் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டு பணி தொடக்கம்

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு 2021-ன் வழிகாட்டி கையேட்டை சென்னை டிபிஐ வளாகத்தில் மாநில பள்ளிக் கல்வி ஆணையர் கே.நந்தகுமார் நேற்று வெளியிட்டார். உடன் தமிழ்நாடு அறிவியல் இயக்க நிர்வாகிகள் வெ.சுகுமாறன், ஆர்.ஜெகதீஸ் வரன், எம்.எஸ்.ஸ்டீபன் நாதன், எஸ்.டி. பாலகிருஷ்ணன், எஸ்.சுப்ரமணி, ஆர்.ஜீவானந்தம், எம்.தியாகராஜன்.படம்: பு.க.பிரவீன்

சென்னை

பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் 2021-ம் ஆண்டுக்கான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டுப் பணிகள் தொடங்கியுள்ளன.

6 முதல் பிளஸ் 2 வரையுள்ள மாணவர்கள் மத்தியில் அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்தவும், ஆய்வுக் கண்ணோட்டத்தை வளர்க்கவும் 1993-ம் ஆண்டு முதல்தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கடந்த 28 ஆண்டுகளாக இந்த மாநாட்டுப் பணிகளை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது. சிறந்த ஆய்வுகளை சமர்ப்பிக்கும் மாணவர்கள் மாநில மாநாடுகளிலும், தேசிய அளவிலான மாநாட்டிலும் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இந்த ஆண்டு ‘நிலைப்புரு வாழ்க்கைக்கான அறிவியல்’ (Science for Sustainable Living) என்ற கருப்பொருளின் கீழ்பல்வேறு தலைப்பில் மாணவர்கள் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

இதற்கான மண்டல, மாவட்ட அளவிலான பயிற்சி முகாம்கள் தற்போது தொடங்கியுள்ளன. இந்நிலையில் ஆய்வில் பங்கேற்பவர்களுக்கான வழிகாட்டி கையேடு நேற்று வெளியிடப்பட்டது.

சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐவளாகத்தில், மாநில பள்ளிக்கல்வி ஆணையர் க.நந்தகுமார் இந்த கையேட்டை வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலப் பொதுச் செயலர் எஸ்.சுப்பிரமணி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x