Published : 28 May 2021 06:40 AM
Last Updated : 28 May 2021 06:40 AM

எஸ்ஆர்எம்ஐஎஸ்டி – ‘தி இந்து’ இணைந்து நடத்தும் எஸ்ஆர்எம் தொழிற்கல்வி வழிகாட்டி மெய்நிகர் மாநாடு: மே 29, 30-ம் தேதி அமர்வுகளில் இலவசமாக பங்கேற்க விண்ணப்பிக்கலாம்

எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (எஸ்ஆர்எம்ஐஎஸ்டி), ‘தி இந்து’குழுமம் இணைந்து ‘எஸ்ஆர்எம் தொழிற்கல்வி வழிகாட்டி மெய்நிகர் மாநாடு 2021’ நடத்தப்பட்டு வருகிறது. ‘இந்து தமிழ் திசை' இந்நிகழ்ச்சியை இணைந்து நடத்துகிறது. மொத்தம் 15 பிரிவுகளாக நடத்தப்படும் இந்த மாநாடு, அறிவியல், பொறியியல், தொழில்நுட்ப படிப்புகள் மற்றும் 2020-களில் அப்படிப்புகளின் முக்கியத்துவம் குறித்து விளக்குகிறது.

10, 11-வது அமர்வுகள்

இந்த மாநாட்டின் 10-வது அமர்வு நாளை (மே 29) காலை 11 மணிக்கு இணையவழியில் நடைபெறுகிறது. ‘அறிவியலில் செய்முறை மற்றும் கற்றலின் முக்கியத்துவம்’ என்ற தலைப்பில் இந்த அமர்வு நடைபெறும். இதன் நிறைவில், வல்லுநர்களிடம் கேள்வி கேட்டு விளக்கம் பெறலாம்.

அம்ரிதா வலர்லெஸ் நெட்வொர்க்ஸ் அண்டு அப்ளிகேஷன்ஸ் மையத்தின் இயக்குநர் மனீஷா வி.ரமேஷ், எஸ்ஆர்எம்ஐஎஸ்டி பயன்பாட்டு அறிவியல் கல்லூரி பேராசிரியர் மற்றும் தலைவர் டி.ஜான் திருவடிகள், இதழியல், மாஸ் கம்யூனிகேஷன் பிரிவு துணை டீன் மற்றும் பேராசிரியர் தர் கிருஷ்ணஸ்வாமி, வாயுசாஸ்த்ரா ஏரோஸ்பேஸ் நிறுவனர், தலைமை செயல் அதிகாரி ஜி.ஜெகதீஷ் கண்ணா பங்கேற்கின்றனர். ‘தி இந்து’ துணை ஆசிரியர் ஆர்.சுஜாதா நிகழ்ச்சியை நடத்துகிறார்.

இதில் இலவசமாக பங்கேற்க http://bit.ly/SRMTHE10 இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

இம்மாநாட்டின் 11-வது அமர்வு வரும் மே 30-ம் தேதி காலை 11 மணிக்கு இணையவழியில் நடைபெறும். ‘ஓட்டல் நிர்வாகம்: இத்தொழிலில் தொற்றுநோய் ஏற்படுத்தியுள்ள பாதிப்பு மற்றும் மாணவர்களுக்கான முன்னேற்றப் பாதை’என்ற தலைப்பில் நடக்கிறது.

இந்நிகழ்வில், பிரபல சமையல்கலைஞர் ‘செஃப்’ தாமு, எஸ்ஆர்எம்ஐஎஸ்டி ஓட்டல் மேனேஜ்மென்ட் நிறுவன இயக்குநர் டி.ஆன்டனி அசோக் குமார், மணிபால் வெல்கம் குழும ஓட்டல்நிர்வாக கல்லூரி முதல்வர் கே.திருஞானசம்பந்தம் ஆகிய வல்லுநர்கள் கலந்துகொள்கின்றனர். எழுத்தாளர் பங்கஜா நிவாசன் நிகழ்ச்சியை நடத்துகிறார். இந்த இலவச அமர்வில் பங்கேற்க http://bit.ly/SRMTHE11 என்ற இணையதளத்தை அணுகலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x