Published : 27 Dec 2020 03:14 am

Updated : 27 Dec 2020 07:46 am

 

Published : 27 Dec 2020 03:14 AM
Last Updated : 27 Dec 2020 07:46 AM

சித்தா, ஆயுர்வேதா உள்ளிட்ட படிப்புகளுக்கு 1,500 விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பு: விண்ணப்பிக்க 31-ம் தேதி கடைசி நாள்

siddha-ayurvedha

சென்னை

சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி ஆகிய மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க வரும் 31-ம் தேதி கடைசி நாள்ஆகும். இதுவரை 1,500விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப் பட்டுள்ளன.

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் கீழ் சென்னை அரும்பாக்கம் அறிஞர்அண்ணா அரசு இந்திய மருத்துவ முறை மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவக் கல்லூரி, யுனானி மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் சித்த மருத்துவக் கல்லூரி, மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஓமியோபதி மருத்துவக் கல்லூரி, கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாறில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி உள்ளன.


இந்த 5 அரசு கல்லூரிகளில் உள்ள 330 இடங்களில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. எஞ்சிய280 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. இதேபோல, 20 தனியார் கல்லூரிகளில் உள்ள இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. எஞ்சிய இடங்களில் 65 சதவீதம் மாநில அரசுக்கும், 35 சதவீதம் நிர்வாக ஒதுக்கீட்டுக்கும் உள் ளன.

இந்நிலையில், இந்திய மருத்துவ முறை படிப்புகளான சித்தா (பிஎஸ்எம்எஸ்), ஆயுர்வேதம் (பிஏஎம்எஸ்), யுனானி (பியுஎம்எஸ்), ஓமியோபதி (பிஎச்எம்எஸ்) ஆகிய பட்டப் படிப்புகளுக்கு 2020-21-ம் கல்விஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம்சுகாதாரத் துறை இணையதளத்தில் (www.tnhealth.tn.gov.in) கடந்த 13-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது.

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றமாணவ, மாணவிகள், அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீட்டுக்கான விண்ணப்பங்கள் மற்றும் தகவல் தொகுப்புகளை பதிவிறக்கம் செய்து வருகின்றனர்.

இதுதொடர்பாக இந்தியமருத்துவ முறை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தேர்வுக்குழு செயலாளர் மலர்விழி கூறியதாவது:

3,500 விண்ணப்பம் பதிவிறக்கம்

இதுவரை மாணவ, மாணவிகள் 3,500 விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துள்ளனர். 1,500 பேர் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்துள்ளனர். வரும் 30-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் 31-ம் தேதி மாலை 5.30 மணிக்குள் ‘செயலாளர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குநர் அலுவலகம், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை - 600 106’ என்ற முகவரியில் கிடைக்குமாறு சமர்ப்பிக்க வேண்டும்” என்றார்.


சித்தா ஆயுர்வேதா31-ம் தேதி கடைசி நாள்விண்ணப்பங்கள் சமர்ப்பிப்புSiddhaAyurvedhaயுனானி ஓமியோபதி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x