Published : 14 Oct 2020 17:36 pm

Updated : 14 Oct 2020 17:36 pm

 

Published : 14 Oct 2020 05:36 PM
Last Updated : 14 Oct 2020 05:36 PM

சென்னை பல்கலைக்கழக இறுதிப்பருவத் தேர்வு முடிவுகள்: மாலை 6 மணிக்கு வெளியீடு

madras-university-to-declare-final-semester-result-today

சென்னை பல்கலைக்கழக இறுதிப் பருவத் தேர்வு முடிவுகள் இன்று (அக்.14) மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளன.

கரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரி பொதுத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டது. எனினும் கல்லூரி இறுதிப் பருவத் தேர்வுகள் மட்டும் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டன.

அந்த வகையில் சென்னை பல்கலைக்கழக இறுதிப் பருவத் தேர்வுகள், கடந்த அக்டோபர் மாதம் ஆன்லைன் முறையில் நடைபெற்றன. மாணவர்கள் தங்களின் வீட்டில் இருந்தே தேர்வுகளை எழுதினர்.

இந்நிலையில், சென்னை பல்கலைக்கழக இறுதிப்பருவத் தேர்வு முடிவுகள் இன்று (அக்.14) மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது. மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை அறிய, unom.ac.in என்ற இணையதளத்துக்குச் சென்று examination பகுதியைக் க்ளிக் செய்ய வேண்டும்.

உரிய தகவல்களை அளித்தவுடன் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிய முடியும்.

பொறியியல் மாணவர்களுக்காக அண்ணா பல்கலைக்கழகமும் இந்த வார இறுதிக்குள், இறுதிப் பருவத் தேர்வு முடிவுகளை வெளியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.


தவறவிடாதீர்!

சென்னை பல்கலைக்கழகம்இறுதிப்பருவத் தேர்வுமாலை 6 மணிMadras UniversityFinal semesterSemester resultகரோனா

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author