Published : 21 Aug 2020 07:34 PM
Last Updated : 21 Aug 2020 07:34 PM

திறனாய்வுத் தேர்வில் வெற்றி: கோவில்பட்டி நாடார் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

தேசியத் திறனாய்வுத் தேர்வில் வெற்றி பெற்ற கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.

ஆண்டுதோறும் மத்தியஅரசின் மனிதவளமேம்பாட்டுத்துறை சார்பில் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய அளவில் திறனாய்வுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாதம் ரூ.ஆயிரம் வீதம் 4 ஆண்டுகளுக்கு ரூ.48 ஆயிரம் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இந்தாண்டுக்கான தேசிய திறனாய்வுத் தேர்வில் கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளி பா.ஜெனிபர், ரா.முத்துக்கார்த்திகா, ஜெ.இருளப்பன், பா.நாகசெல்வம், ஜே.சாமுவேல்ராஜா, மு.விஜய்அரவிந்த், மா.பானுசூர்யா, சு.மகாலட்சுமி, மு.பவித்ரா ஆகிய 9 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இவர்களுக்கான பாராட்டு விழாவுக்கு பள்ளிச் செயலாளர் கே.கண்ணன் தலைமை வகித்தார். வெற்றி பெற்ற மாணவர்களை கோவில்பட்டி நாடார் உறவின் முறைச் சங்கத் தலைவர் ஏ.பி.கே. பழனிச்செல்வம், பள்ளிச் செயலாளர் கே.கண்ணன், பொருளாளர் அய்யப்பன் மற்றும் உறுப்பினர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர்.

விழாவில், நாடார் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜான்கணேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். விழாவில் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x