Published : 12 Jul 2020 07:15 am

Updated : 12 Jul 2020 07:15 am

 

Published : 12 Jul 2020 07:15 AM
Last Updated : 12 Jul 2020 07:15 AM

பிளஸ் 2 மறுதேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியீடு

hall-ticket-for-12th-students

சென்னை

பிளஸ் 2 மறுதேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் நாளை (ஜூலை 13) வெளியிடப்பட உள்ளது.

ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 24-ம் தேதி நடைபெற்ற பிளஸ் 2 இறுதித்தேர்வில் பங்கேற்க முடியாத மாணவர்களுக்கு ஜூலை 27-ம் தேதி மறுதேர்வு நடத்தப்பட உள்ளது.

இணையதளத்தில் பதிவிறக்கம்

இதற்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை (ஹால் டிக்கெட்) மாணவர்கள் நாளை (ஜூலை 13) முதல் ஜூலை 17-ம்தேதி வரை www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், இணையதள வசதி இல்லாத மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் தங்களுக்கான தேர்வு மையங்களிலும் நேரடியாக சென்று பெற்றுக் கொள்ளலாம். மேலும், தேர்வு மையங்கள் மாணவர்கள் படிக்கும் அந்தந்த பள்ளிகளிலேயே அமைக்கப்பட உள்ளன.

கூடுதல் விவரங்களை பள்ளி தலைமை ஆசிரியர்களை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என்று தேர்வுத் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

பிளஸ் 2 மறுதேர்வுஹால் டிக்கெட்பிளஸ் 2 மறுதேர்வுக்கான ஹால் டிக்கெட்​​​​​​​இணையதளத்தில் பதிவிறக்கம்தேர்வுத் துறை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author