Published : 20 Feb 2020 08:18 AM
Last Updated : 20 Feb 2020 08:18 AM

நதிகள் இணைப்புக்கு ரூ.700 கோடி நிதி ஒதுக்கீடு: தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த பள்ளி மாணவர்கள்

கோப்புப்படம்

புதுக்கோட்டை

காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு முதல் கட்டமாக ரூ.700 கோடி நிதி ஒதுக்கியதற்காக தமிழக அரசுக்கு புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் நன்றி தெரிவித்தனர்.

கரூர் மாவட்டம் மாயனூரில் உள்ள காவிரி ஆற்றின் கதவணையில் இருந்து 256 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விருதுநகர் மாவட்டம் குண்டாறுடன் இணைக்கும் திட்டத்தில் முதல் கட்டமாக மாயனூரில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு வெள்ளாறு வரை ரூ.7,677 கோடிக்கு 119 கிலோமீட்டருக்கு கால்வாய் அமைக்கதிட்டமிடப்பட்டது.

இத்திட்ட மதிப்பீட்டில் இருந்துமுதல் கட்ட நிதியாக ரூ.700 கோடியை பட்ஜெட்டில்ஒதுக்கி தமிழக அரசு அறிவித்தது. அரசின் அறிவிப்புக்கு மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் என புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 1,950 பள்ளிகளில் பெரும்பாலான பள்ளிகளில் இறைவணக்க கூட்டத்தின்போது மாணவ, மாணவிகள், காவிரி- குண்டாறுஇணைப்பு திட்டத்துக்கு நிதி ஒதுக்கிய முதல்வர்பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இதற்கு உறுதுணையாக இருந்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மருத்துவர் சி.விஜயபாஸ்கர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x