Published : 11 Feb 2020 08:42 AM
Last Updated : 11 Feb 2020 08:42 AM

விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டி: சேலத்தில் பிப்.13, 14-ம் தேதிகளில் நடக்கிறது

சேலம்

முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டி, சேலத்தில் வருகிற 13, 14-ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ஞானசுகந்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

கபடி, டென்னிஸ்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சேலம் மாவட்ட பிரிவு சார்பில், முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி, மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் வரும் 13 மற்றும் 14-ம் தேதிகளில் நடக்கிறது. தடகளம், நீச்சல், ஜூடோ,குத்துச்சண்டை, இறகுப்பந்து, கூடைப்பந்து,வளைகோல்பந்து, கபடி, டென்னிஸ் மற்றும் கைப்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடைபெறுகின்றன.

இதில் கலந்து கொள்பவர்கள் 01.01.1995 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்தவர்களாக இருக்க வேண்டும். இதற்கான பிறப்புச் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் குறைந்தது 5 வருடங்களாவது வசித்து வருவதற்கான புகைப்படத்துடன் கூடிய சான்றை கொண்டுவர வேண்டும்.

ஆன்லைனில் பதிவு

சான்றினை சமர்ப்பிக்காதவர்கள் மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள். மாவட்டஅளவிலான இப்போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1000, இரண்டாவது பரிசாக ரூ.750 மற்றும் 3-வது பரிசாக ரூ.500 வழங்கப்படும்.

மாவட்ட போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மட்டுமே மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். எக்காரணம் கொண்டும் நேரடியாக மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டாது.

போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில், ‘மாவட்ட அளவிலான முதல்வர்கோப்பைக்கான போட்டிகள் 2019-2020' என்னும்தலைப்பில் சேலம் மாவட்டத்தில் தங்கள் பெயர்களை ஆன்லைன் மூலமாக பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x