தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் 10-ஆம் வகுப்பு வினா வங்கி புத்தகம் வெளியீடு: தமிழகம் முழுவதும் 32 மையங்களில் வாங்க ஏற்பாடு

தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் 10-ஆம் வகுப்பு வினா வங்கி புத்தகம் வெளியீடு: தமிழகம் முழுவதும் 32 மையங்களில் வாங்க ஏற்பாடு
Updated on
2 min read

தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் 10-ஆம் வகுப்புமாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள வினா-வங்கி புத்தகமும், பிளஸ் 2 மாணவர்களுக்கான கணித வினா வங்கி மற்றும் தீர்வுப்புத்தகமும் ஜனவரி 27 முதல் தமிழகம் முழுவதும் 32 மையங்களில் விற்பனைக்குக் கிடைக்கும்.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் வெளியீடான 10-ஆம்வகுப்பு மாணவர்களுக்கான வினாத்தாள் தொகுப்பு (வினா வங்கி) தமிழ்மற்றும் ஆங்கில வழியில் ஒரேதொகுதியாக ரூ.60 விலையிலும், அதேபோல், பிளஸ் 2 மாணவர்களுக்கான கணித பாட வினாத்தாள் தொகுப்பு மற்றும் தீர்வுப்புத்தகம் தமிழ் மற்றும் ஆங்கில வழிக்கு தனித்தனியாக ரூ.80 விலையிலும் விற்பனைக்கு கிடைக்கும்.

வினாத்தொகுப்புகளை ஜனவரி 27 முதல் பின்வரும் 32 மையங்களில் வாங்கிக்கொள்ளலாம். பள்ளிக்கல்வி இயக்கக வளாகத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதால், மாநிலபெற்றோர் ஆசிரியர் கழக அலுவலகத்தில் விற்பனை ஏதும் கிடையாது. அதற்குப் பதிலாக சென்னையில் கூடுதலாக 2 விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டு மொத்தம் 3 இடங்களில் விற்பனை செய்யப்படும்.

1. சென்னை: அரசு மேல்நிலைப் பள்ளி, அரும்பாக்கம்.

எம்சிசி மேல்நிலைப் பள்ளி, சேத்துப்பட்டு.

ஜெயகோபால் கரோடியா மகளிர்மேல்நிலைப் பள்ளி, சைதாப்பேட்டை.

2. காஞ்சிபுரம்: டாக்டர் பி.எஸ்.சீனிவாசா நகராட்சி மேல்நிலைப்பள்ளி, காஞ்சிபுரம்.

3. திருவள்ளூர்: ஆர்.எம்.ஜெயின் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருவள்ளூர்.

4. கடலூர்: அரசு மேல்நிலைப் பள்ளி, மஞ்சக்குப்பம், கடலூர் (10-ம் வகுப்பு மட்டும்) நகராட்சி மேல்நிலைப் பள்ளி, கடலூர் (12-ம் வகுப்பு மட்டும்)

5. விழுப்புரம்: விஆர்.பி. மேல்நிலைப்பள்ளி, ரங்கநாதன் ரோடு, விழுப்புரம்.

6. தஞ்சாவூர்: அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, மேம்பாலம், தஞ்சாவூர்.

7. நாகப்பட்டினம்: சிஎஸ்ஐ மேல்நிலைப் பள்ளி, நாகப்பட்டினம்

8. திருவாரூர்: அரசு மேல்நிலைப் பள்ளி, பணங்குடி, நன்னிலம் ஒன்றியம், திருவாரூர்.

9. மதுரை: சேதுபதி மேல்நிலைப் பள்ளி, வடக்கு வெளிவீதி, மதுரை.

10. தேனி: அரசு மேல்நிலைப் பள்ளி, அல்லிநகரம், தேனி.

11. திண்டுக்கல்: அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பழனி சாலை, திண்டுக்கல்.

12. ராமநாதபுரம்: டிடி விநாயகா மேல்நிலைப் பள்ளி, வெளிப்பட்டினம், ராமநாதபுரம்.

13. விருதுநகர்: த.பெ.நா.நகரவை மேல்நிலைப் பள்ளி, விருதுநகர்.

14. சிவகங்கை: அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, மேலூர் ரோடு, சிவகங்கை.

15. திருநெல்வேலி: ஜவஹர் அரசுஉயர்நிலைப் பள்ளி, திருநெல்வேலி டவுன்.

16. தூத்துக்குடி: புனிச லசால் மேல்நிலைப் பள்ளி, தூத்துக்குடி

17. கன்னியாகுமரி: எஸ்.எல்.பி.அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி, நாகர்கோவில்.

18. வேலூர்: அரசு மேல்நிலைப் பள்ளி, கொணவட்டம், வேலூர்.

19. திருவண்ணாமலை: சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளி, திருவண்ணாமலை.

20. சேலம்: பாரதி வித்யாலயா மேல்நிலைப் பள்ளி, மரவனேரி, சேலம்.

21. நாமக்கல்: அரசு மேல்நிலைப் பள்ளி, அண்ணா சாலை, ராசிபுரம், நாமக்கல்.

22. தர்மபுரி: அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, தர்மபுரி.

23. திருச்சி: அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, மணச்சநல்லூர், திருச்சி

24. கரூர்: நகராட்சி குமரன் உயர்நிலைப் பள்ளி, கரூர்.

25. பெரம்பலூர்: தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப் பள்ளி, பெரம்பலூர்.

26. புதுக்கோட்டை: பிரகதாம்பாள் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, புதுக்கோட்டை.

27. கோவை: அரசு மேல்நிலைப் பள்ளி, ராஜவீதி, கோவை.

28. ஈரோடு: அரசு மாதிரி மகளிர்மேல்நிலைப் பள்ளி, பன்னீர்செல்வம் பார்க், ஈரோடு.

29. நீலகிரி: அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி, குன்னூர், நீலகிரி.

30. கிருஷ்ணகிரி: அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, பெங்களூரு ரோடு, கிருஷ்ணகிரி.

31. அரியலூர்: அரசு மேல்நிலைப் பள்ளி, அரியலூர்.

32. திருப்பூர்: கே.எஸ்.சி. அரசு மேல்நிலைப் பள்ளி, கே.எஸ்.சி. பள்ளி ரோடு, திருப்பூர்.

பிளஸ் 2 அறிவியல் பாடப்பிரிவுக்கு தமிழ் மற்றும் ஆங்கில வழியில் ஒரேதொகுதியாக ரூ.60-ம் (தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணினி அறிவியல்), கலைப்பாட பிரிவுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலவழியில் ஒரே தொகுதியாக ரூ.80-ம்(தமிழ், ஆங்கிலம், கணக்குப்பதிவியல், வணிகவியல், பொருளாதாரம், வணிக கணிதம், புள்ளியியல்) என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அறிவியல் மற்றும் கலைப்பாடபிரிவுக்கான வினாத்தாள் தொகுப்பு பிப்ரவரி முதல் வாரத்தில் விற்பனைக்கு கிடைக்கும்.இவ்வாறு கண்ணப்பன் கூறியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in