Published : 22 Jan 2020 10:37 AM
Last Updated : 22 Jan 2020 10:37 AM

செய்திகள் சில வரிகளில் - டெல்லியில் பனிமூட்டம்: காற்றின் தரம் மிக மோசமானது

டெல்லி நேற்று காலை கடும் பனிமூட்டத்துடன் காணப்பட்டது. அப்போது வெப்பநிலை குறைந்தபட்சமாக 9.2 டிகிரி செல்சியஸ் அளவு இருந்தது. இது நடப்பு பருவத்தின் சராசரியைவிட இரண்டு புள்ளிகள் அதிகம். அதேபோல் ஈரப்பதம் 100 சதவீதமாக இருந்தது.

காற்று தர அட்டவணைப் படி டெல்லியில், காற்றில் உள்ள நுண் துகள்களின் அளவு 348 என பதிவாகி உள்ளது. இதனால் டெல்லியில் காற்றின் தரம் மிக மோசமான நிலையில் உள்ளது.

- பிடிஐ

சிஐஎஸ்எப் படையில் 2000 பணியிடம்: மத்திய அரசு திட்டம்

புதுடெல்லி

நாட்டின் 60 விமான நிலையங்கள், அணுமின் நிலையங்கள், முக்கிய அரசுக் கட்டிடங்களில் சிஐஎஸ்எப் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மேலும், சிஐஎஸ்எப் கட்டுப்பாட்டில் இயங்கும் சிறப்பு பாதுகாப்புப் படை விவிஐபிக்களுக்கு பாதுகாப்பு அளித்து வருகிறது.

இந்நிலையில், சிஐஎஸ்எப்-ன் பலத்தை அதிகரிக்கும் வகையில் 2000 பணியிடங்களை உருவாக்க மத்திய உள்துறை அமைச்சகம் சமீபத்தில் அனுமதி அளித்துள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் தலா ஆயிரம் வீரர்களைக் கொண்ட மேலும் இரண்டு படைப்பிரிவுகள் உருவாக்கப்படும். இப்போது சிஐஎஸ்எப் -ல் 1.8 லட்சம் போலீஸார் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x