Published : 26 Dec 2019 10:18 AM
Last Updated : 26 Dec 2019 10:18 AM

கிண்டி சிறுவர் பூங்காவில் திறக்கப்பட்டுள்ள 3டி அனிமேஷன் திரையரங்க கட்டணம் நிர்ணயம்

சென்னை

சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில் புதிதாக திறக்கப்பட்டுள்ள 3டி அனிமேஷன் திரையரங்கத்துக்கான நுழைவு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்காவில், பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இப்பூங்காவுக்கு ஆண்டுதோறும் 9 லட்சம் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் வருகை தருகின்றனர். இங்கு நுழைவுக் கட்டணமாக குழந்தைகளுக்கு ரூ.5, பெரியவர்களுக்கு ரூ.20 வசூலிக்கப்படுகிறது.

இப் பூங்காவை உலகத் தரத்துக்கு உயர்த்தும் விதமாக, இந்தியாவிலேயே முதல் முறையாக ரூ.50 லட்சம் மதிப்பில் 3டி அனிமேஷன் திரையரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அதை கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற வன உயிரின வாரம் நிறைவு விழாவில் பங்கேற்ற வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திறந்துவைத்தார்.

இத்திரையரங்கில் புலி, குரங்கு, சிறுத்தை, பாம்பு, கரடி, கங்காரு, பென்குவின், டால்பின், டைனோசர், ஒட்டகச்சிவிங்கி உள்ளிட்ட விலங்குகள் அருகில் இருப்பது போன்றும், அதை தொட்டுப் பார்ப்பது போன்ற அனுபவத்தையும் குழந்தைகள் பெறமுடியும். இதை பார்ப்பதற்கான நுழைவு கட்டணத்தை அரசு நிர்ணயித்து, அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி, 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ரூ.15-ம், பெரியவர்களுக்கு தலா ரூ.50-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x