Published : 19 Nov 2019 07:54 AM
Last Updated : 19 Nov 2019 07:54 AM

காலநிலை மாற்றம் ஏற்பட்டு வெப்பநிலை அதிகரித்து வருவதால் இந்தியா தனது அடுத்த தலைமுறையை இழக்கிறதா?

புதுடெல்லி

காலநிலை மாற்றம் ஏற்பட்டு வெப்பநிலை அதிகரித்து வருவதால், காற்று மாசு, வெப்பக்காற்று, ஊட்டசத்து குறைபாடு ஆகியவற்றால் இந்திய குழந்தைகள் மிகப்பெரும் சுகாதார பிரச்சினைகளை சந்தித்து வருவதாக புதிய ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உடல்நலம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான ‘லான்செட் கவுண்டவுன் அமைப்பு 41 குறியீடுகள் மூலம் விரிவான வருடாந்திர ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில் உலக சுகாதார அமைப்பு மற்றும் உலக வங்கி உட்பட 35 நிறுவனங்களைச் சேர்ந்த 120 நிபுணர்கள் பங்கேற்றனர்.

காலநிலை மாற்றம் உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிப்பதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

2 டிகிரி செல்சியஸுக்குக் குறைவாக புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த, பாரிஸ் ஒப்பந்தத்தின் இலக்குகளை உலக நாடுகள் பின்பற்றவில்லை என்றால் வருங்காலத் தலைமுறையினரின் நல்வாழ்வை நம்மால் வடிவமைக்க முடியாது என்று அறிக்கை எச்சரித்துள்ளது.

இந்த அறிக்கையின் இணை ஆசிரியரும், இந்திய பொது சுகாதார அறக்கட்டளையின் பேராசிரியருமான பூர்ணிமா பிரபாகரன் கூறுகையில், “இந்தியாவைப் போலவே காலநிலைமாற்றத்தின் காரணமாக, பல நாடுகளின் குழந்தைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆனால் இந்தியாவில் மக்கள் தொகை, சுகாதார ஏற்றத்தாழ்வு, வறுமை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு அதிகமாக உள்ளது.

இன்று பிறக்கும் குழந்தைகளின் எதிர்காலத்தை காலநிலை மாற்றம்தான் தீர்மானிக்கிறது.

இப்போது சில தீவிரமான நடவடிக்கைகளை நாம் எடுக்காவிட்டால், குழந்தைகளின் ஒவ்வொறு 10 ஆண்டுகளும் வித்தியாசமாக மாறும். இந்நிலை தொடந்தால், 4 டிகிரி அதிகமான வெப்பத்தில்தான் நோயோடு அவர்கள் வாழ்வார்கள்.

வெப்பநிலை அதிகரிப்பால் உடல்நல அபாயங்களுக்கு குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களின் உடல்கள் மற்றும் நோயெதிர்ப்பு அமைப்புகள் வளர்ந்து வரும் நிலையில்தான் இருக்கும். இதனால் நோய், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்” என்றார்.

இந்தியாவில் குழந்தை இறப்புக்குமுக்கிய காரணம் வயிற்றுப்போக்குதான். இந்த நோய்த்தொற்றுகள் புதியபகுதிகளிலும் பரவுகின்றன. அதேபோல்தான், பல நாடுகளில் 2015-ம்ஆண்டில் பல ஆயிரக்கணக்கான மக்களை வெப்பம் கொன்றது. அது தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது.

கடந்த 20 ஆண்டுகளாக நோய்தடுப்பு நடவடிக்கைகளை அரசுகள் எடுத்து வரும் நிலையில், கடந்த 50 ஆண்டுகளில் நாம் பெற்ற சுகாதார லாபங்களையும், நமது அடுத்த தலைமுறைகளையும் மாறிவரும் காலநிலையால் இழந்து விடுவோம்.

எரிசக்தி துறைகளின் கொள்கையை முழுமையான மாற்றவேண்டும். ஐ.நா. காலநிலை இலக்குகளை உலக நாடுகள் பூர்த்திசெய்து, அவர்களின் அடுத்த தலைமுறையின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வேண்டும்2019 முதல் 2050 வரை புதைபடிவ சிஓ2(CO2) உமிழ்வை ஆண்டுக்கு ஆண்டு 7.4 சதவீதம் குறைப்பதன் மூலம், புவி வெப்பமடைதலை 1.5 டிகிரி செல்சியஸ் குறைக்க நமது இலக்கை நிர்ணயம் செய்யவேண்டும் என்று அறிக்கை கூறப்பட்டுள்ளது.

தி லான்செட் கவுண்ட்டவுனின் நிர்வாக இயக்குனர் நிக் வாட்ஸ் கூறுகையில், “குழந்தை பருவத்தில் ஏற்பட்ட சுகாதார விளைவுகள் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும். பசுமை இல்ல வாயு உமிழ்வைக் குறைக்க அனைத்து நாடுகளும் முன்வரவில்லை என்றால் நல்வாழ்வு மற்றும் ஆயுட்காலம் ஆகியவற்றை நினைத்து பார்க்க முடியாது” என்றார்.

வெப்பநிலை அதிகரிக்கும் போது அறுவடைகள் சுருங்கி, உணவுப் பாதுகாப்பை அச்சுறுத்தும் மற்றும் உணவு விலை உயரும் என்றும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் அதனுடன் தொடர்புடைய குன்றிய வளர்ச்சி, பலவீனமான நோயெதிர்ப்பு மற்றும் நீண்டகால வளர்ச்சி பிரச்சினைகள் ஆகியவற்றால் மிகவும் பாதிக்கப்பட்டு வருவதாக அறிக்கை எச்சரித்துள்ளது. வெப்பநிலை அதிகரிப்பால் டெங்கு, ஆஸ்துமா, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

இன்று பிறந்த ஒரு குழந்தைவெள்ளம், வறட்சி மற்றும் காட்டுத்தீ ஆகியவற்றால் அதிக ஆபத்தைசந்திக்கும். வெப்பநிலை உயர்வால் இந்தியாவில் மட்டும் 2.1 கோடி மக்கள்நேரடியாகவும், சுவாச நோய்போன்ற நோய்களால் மறைமுகமாக வும் இறந்துள்ளனர் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x