Published : 11 Nov 2019 09:42 AM
Last Updated : 11 Nov 2019 09:42 AM

மாணவர்களுக்கு கலை ஆர்வத்தை ஊக்குவிக்க அரசு பள்ளியில் ‘ஆர்ட் ஸ்டூடியோ’- ஓவிய ஆசிரியரின் புதுமையான முயற்சி

திருச்சி

திருச்சி அருகே அரசு பள்ளி ஓவியஆசிரியர், தனது மாணவர்களுக்கு கலைகளின் மீதான ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் வகையில் ‘ஆர்ட் ஸ்டூடியோ’வை நிறுவி, அதில் மாணவர்களின் ஏராளமான படைப்புகளைக் காட்சிப்படுத்தி உள்ளார்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே அரசங்குடியில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றி வரும் கே.அருணபாலன், பள்ளியில் படிக்கும் கலையில் ஆர்வமுள்ள மாணவ, மாணவிகளுக்கு ஓவியம், ஜப்பானிய காகித மடிப்புக் கலையான ஓரிகாமி, ஓவியம், முகமூடிதயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு கலைகளை கற்றுக் கொடுத்து வருகிறார். அவ்வப்போது மாணவர்களுக்கு பயிலரங்கம் நடத்தி கலைப் பயிற்சிகளையும் அளித்து வருகிறார்.

மாணவ, மாணவிகளின் இந்தபடைப்புகளை, பள்ளியில் உள்ள தனதுஅறையை ‘ஆர்ட் ஸ்டூடியோ’வாக மாற்றி, அதில் காட்சிப்படுத்தி உள்ளார். இந்த ஆர்ட் ஸ்டூடியோ அறை பழமையான கட்டிடமாக இருந்தாலும், எங்கு திரும்பினாலும், பல்வேறு இயற்கை காட்சிகள், விலங்குகளின் ஓவியங்கள், கார்ட்டூன் கதாபாத்திரங்கள் மற்றும்ஓவியங்கள், ஓரிகாமி படைப்புகள் என வண்ணமயமாகக் காட்சியளிக்கின்றன. மேலும், தனது சொந்தப் பணம் ரூ.18 ஆயிரம் செலவழித்து வகுப்பறைக் கட்டிடத்தின் தரைத்தளத்தில் இயற்கை காட்சிகளை வரைந்து அழகுபடுத்தியுள்ளார். இதுகுறித்து ஓவியஆசிரியர் அருணபாலன் கூறியதா வது:அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளை மாணவர்களும், பெற்றோர்களும் விரும்புவதற்கு, சுகாதாரமான சுற்றுப்புறம், அழகான உள்கட்டமைப்பு ஆகியவையே முக்கிய காரணங்கள். எனவே, இந்த அரசு பள்ளியையும் அவ்வாறு மாற்றினால் என்ன எனத் தோன்றியது. அதன் வெளிப்பாடுதான் வகுப்பறை கட்டி டத்தில் இயற்கை காட்சிகளை வரைய வைத்தது.

பொதுவாகவே சுவரில் ஓவியங்கள் இருந்தால் அது மனதுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். பள்ளி மாணவர்களுக்கு இந்த ஓவியங்கள் புது உற்சாகத்தை அளிக்கிறது. இந்த பணிக்குஎங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியர் முகமது பரூக் மற்றும் ஆசிரியர்கள் முழு ஒத்துழைப்பு அளித்து ஊக்கப் படுத்தி வருகின்றனர் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x