Published : 05 Nov 2019 08:04 AM
Last Updated : 05 Nov 2019 08:04 AM

பிளஸ் 2 முடித்துவிட்டு என்ன படிக்கலாம்? - சிபிஎஸ்இ வழிகாட்டி புத்தகம் வெளியீடு

சென்னை

பிளஸ் 2 முடித்துவிட்டு என்னென்ன படிக்கலாம் என்பது குறித்து மாணவர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு படிப்புகளை உள்ளடக்கிய வழிகாட்டி புத்தகத்தை (Compendium of Academic Courses After plus 2) சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது.

பிளஸ் 2-வுக்குப் பிறகு என்னபடிக்கலாம் என்பது பெரும்பாலான மாணவர்களுக்கு மட்டுமின்றி அவர்களின் பெற்றோருக்கும் மிகப்பெரிய சவாலாக இருந்துவருகிறது. தாங்கள் தேர்வுசெய்யும் படிப்புக்கு உடனடியாக வேலை கிடைக்குமா, அதற்கு எதிர்காலம் எப்படி இருக்கும் என பிளஸ் 2 மாணவர்கள் குழம்பி போய்விடுவதுண்டு. மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகள் தாண்டி எத்தனையோ படிப்புகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், அப்படிப்புகள் குறித்து மாணவர்களுக்கு சரியான தகவல்கள் தெரிவதில்லை.

இந்நிலையில், பிளஸ் 2 முடிக்கும் மாணவர்களுக்கு உதவும் வகையில் மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வழிகாட்டி புத்தகத்தை வெளியிட்டுள்ளது. 122 பக்கங்கள் கொண்ட அந்தபுத்தகத்தில் 113 வகையான படிப்புகள், அவை எங்கு வழங்கப்படுகின்றன என்பன உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளன. பொறியியல் படிப்பில் உள்ள பல்வேறு பிரிவுகள், மருத்துவம், பல்மருத்துவம், ஆயுர்வேதம், இயற்கை மருத்துவம், பிசியோதெரபி, பார்மசி, என மருத்துவம் சார்ந்த படிப்புகள், மொழி, மானுடவியல், தொல்லியல், சமூகவியல், இதழியல், உள்ளிட்ட கலைஅறிவியல் தொடர்பான படிப்புகள், அனிமேஷன், போட்டோகிராபி, சினிமா, இசை, வங்கி மேலாண்மை, கிராபிக் டிசைனிங், ஹோட்டல் மேனேஜ்மென்ட், உள்அலங்காரம், சுற்றுலா மேலாண்மைஎன தொழில் சார்ந்த படிப்புகள் என 113 வகையான படிப்புகள் குறித்தும், அதற்கான கல்வித்தகுதி, மாணவர் சேர்க்கை நடைமுறை, அப்படிப்புகள் வழங்கும் உயர் கல்விநிறுவனங்கள், படிப்புக்கான முதுநிலை படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்பு வாய்ப்புகள் குறித்து இந்தவழிகாட்டி புத்தகத்தை மாணவர்கள் அறிந்துகொள்ளலாம். இப்புத்தகத்தை சிபிஎஸ்இ இணையதளத்தில் (www.cbse.nic.in) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x