Published : 16 Oct 2019 10:34 AM
Last Updated : 16 Oct 2019 10:34 AM

பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

மதுரை

மதுரை டாக்டர் டி.திருஞானம் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் 80-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர். பேரணிக்கு பள்ளியின் தலைவர் வே.சுரேந்திரன் பாபு தலைமை வகித்தார். பள்ளியின் செயலர் சதாசிவம் முன்னிலை வகித்தார். ஆசிரியை தங்கலீலா வரவேற்றார். பேரணியின்போது தலைமை ஆசிரியர் க.சரவணன் பேசும்போது, ‘‘பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. கடைகளில் பிளாஸ்டிக் பை கொடுத்தால் வாங்கக் கூடாது. துணிப்பையை தூக்கி எறிந்தால் மண்ணுக்கு உரமாகும். பிளாஸ்டிக் மண்ணுக்குள் மக்காது. மண்ணையே மலடாக்கும். காந்திய வழியில் சுற்றுப்புறத் தூய்மையை கடைபிடிப்போம்” என்றார்.

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஓவியப் போட்டியில் மாணவிகள் தமிழரசி, சந்தோஷ், செல்வ மீனாட்சி, ஆகியோரும், கவிதை போட்டியில் மாணவர்கள் முகமது அசான், சூர்யா ஆகியோரும், பேச்சுப் போட்டியில் சுஸ்மிதா, அனுசியா, மணிகண்டன் ஆகியோரும், கட்டுரைப் போட்டியில் மாணவிகள் கீர்த்தனா, பிரியதர்ஷினி ஆகியோரும் பரிசு பெற்றனர். பேரணி மற்றும் போட்டிகளை ஆசிரியைகள் பா.கீதா, பா.ச.சுமதி, மீ.வெங்கட லெட்சுமி, செ.சித்ராதேவி, மு.சரண்யா, உஷாதேவி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். நிறைவாக, ஆசிரியை பாக்யலெட்சுமி நன்றி கூறினார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x