Published : 15 Oct 2019 10:50 AM
Last Updated : 15 Oct 2019 10:50 AM

பாலத்துக்கு அடியில் இலவச பாடசாலை: கல்வியின் அருமையை உணர்த்தும் மாமனிதர்

புதுடெல்லி

இந்திய துணை கண்டத்தில் இன்னும் பல கிராங்களுக்கு பள்ளிகளே சென்றடையவில்லை என்பது வருத்தமான உண்மையாகும். அதேபோல், பல நகர குழந்தைகள் மழைக்குக்கூட பள்ளிக்கு ஒதுங்கியது இல்லை. ஆனால், டெல்லியில் மழைக்கு ஒதுங்கும் ஒரு பெரிய மெட்ரோ பாலத்துக்கு அடியில் பள்ளி ஒன்றை, 13 ஆண்டுகளாக நடத்தி வருகிறார் மாமனிதர் ஒருவர்.

டெல்லியை சேர்ந்தவர் ராஜேஷ் குமார் சர்மா. 49 வயதான இவர் கடந்த 13 ஆண்டுகளாக, யமுனை நதிக்கரை ஒரமாக உள்ள மேம்பாலத்துக்கு அடியில் தொடக்கப்பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். “பாலத்துக்கு அடியில் இலவச பாடசாலை” என்னும் இப்பள்ளியில், காலை 9-11 மணி வரை 120 சிறுவர்களுக்கும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணிவரை 180 சிறுமிகள் என 300 பேர் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் 7 ஆசிரியர்கள் இலவசமாக பாடம் நடத்தி வருகிறார்கள்.

மேம்பாலத்தின் சுவரில் கருப்பு வண்ணம் பூசப்பட்டு, கரும்பலகையாக பயன்படுத்தப்படுகிறது. அதேபோல், மாணவர்களுக்கு தேவையான நோட்டு, புத்தகம், பேனா, பென்சில் போன்றவறை அங்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் தங்களின் கை காசைப் போட்டு வாங்கி கொடுக்கிறார்கள். இதுகுறித்து, ராஜேஷ் குமார் கூறுகையில், “பள்ளித் தொடங்கிய சில ஆண்டுகளிலே தன்னார்வு நிறுவனங்கள் என்னை தொடர்பு, பள்ளியைதற்காலிகமாக, வேறு கட்டடங்களுக்கு மாற்றலாம் என்று கேட்டார்கள்.

ஆனால், அவை சில சந்தேகங்களை எனக்கு கொடுத்தது. குழந்தைகளின் கல்வி குறித்துயாரும் இங்கு அக்கறை செலுத்தவில்லை. குழந்தைகளை காட்டி, யாரிடமாது பணம் பறிக்கவேண்டும் என்றுதான் அவர்கள் நினைத்தார்கள். அதனால், அதை முழுமையாக மறுத்துவிட்டேன்” என்றார் ஆதங்கத்துடன்.. பிச்சைக்காரர்களின் பிள்ளைகள், ரிக்‌ஷா ஓட்டும் பெற்றோரின் குழந்தைகள் போன்று அடிப்படையே இல்லாத குடும்ப பிண்ணனி கொண்டவர்கள்தான் இந்த பள்ளியில் படிக்கிறார்கள்.

இந்த பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு, அக்கம் பக்கத்தினர் சிலர் உணவு, தண்ணீர் கொடுத்து உதவுகிறார்கள். பணம் இல்லாததால், பிஎஸ்சி படிப்பை ராஜேஷால் தொடர முடியாமல் போனது. அந்த ஆதங்கத்தில் பணம் இல்லாமல் யாரும் கல்வியை பெற முடியாமல் போகக்கூடாது என்பதற்காகதான் இந்த பள்ளியை ராஜேஷ் தொடங்கியுள்ளார்.

பள்ளிக்கு அருகில் ஒரு சிறிய கடையை ராஜேஷ் நடத்தி வருகிறார். அவருக்கு அதுதான் வருமான ஆதரமாக உள்ளது. இப்பள்ளியில் படிக்கும் 6 வயது சிறுமி சுனிதா கூறுகையில், வாழ்க்கையில் எதையாவது சாதிக்கவேண்டும் என்றுதான் பள்ளிக்கு வருகிறேன்.

இடி, மின்னலுடன், மழை பெய்தால் பள்ளியை திறக்க முடியவில்லை. அப்போது எல்லாம், எனது கனவு கலைந்து விடுமோ என்று பயமாக இருக்கு” என்கிறார் கண்ணீர் மல்க... கல்வியின் அருமை, பிற்காலத்தில் கஷ்டப்படும்போது புரியும் என்று கூறுவார்கள். ஆனால், நம்மை சுற்றி பலருக்கும் கல்விக்கே கஷ்டபடு கிறார்கள். எனவே, மாணவர்களே நமக்கு கிடைத்த இந்த கல்வியின் அருமையை நீங்களும் உணர்ந்து படியுங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x