Published : 11 Oct 2019 10:29 AM
Last Updated : 11 Oct 2019 10:29 AM

எந்தத் தடைகள் வந்தாலும் பயமில்லை: ஒடிசா ஆசிரியையின் துணிச்சல் பயணம்

புவனேஸ்வர்

ஒரு நல்ல மனிதன் உருவாவதற்கு முதல் பிள்ளையார் சுழி போடுவது அவர்தம் ஆசிரியர்கள்தான் என்பதை யாரும் மறுப்பதற்கு இல்லை. வானளவு புகழ் பெற்ற தலைவர்கள் பலர், இன்னும் தனது ஆசிரியர்களை கண்டால் பெட்டி பாம்பை அடங்கி விடுவார்கள். அந்தப் புகழ், ஒரு சாதாரண ஆசிரியருக்கு எப்படி வருகிறது என்றால், அவர்களுடைய செயல்பாடுகள் மூலம்தான்..

அப்படிப்பட்ட ஒரு ஆசிரியைதான்.. பினோதினி சமல். ஒடிசா மாநிலம் தென்கனல் என்னும் பகுதியில் உள்ள ரதியபலா என்ற தொடக்க பள்ளியில் 2008-ம் ஆண்டு ரூ.1700 சம்பளத்தில் ஆசிரியையாக பணியில் சேர்ந்து தற்போதுதான் ரூ.7,000 சம்பளத்துக்கு வந்துள்ளார். அந்த ஆண்டு 1000-த்துக்கும் அதிகமான ஒப்பந்த ஆசிரியர்
களை ஒடிசா அரசு நியமித்தது.

அந்த ஆயிரத்தில் ஓருவர்தான், நமது பினோதினி சமல்.. அப்படி என்ன சாதனை செய்தார் தெரியுமா? கடந்த வாரம் சபுவா நதியில் கழுத்தளவு தண்ணீரில், கைப்பை ஒன்றை தலைக்கு மேல் வைத்துக் கொண்டு ஆற்றை ஒரு பெண் கடப்பதுபோன்று ஒரு புகைப்படம் சமூக வலைதளங் களில் வேகமாக பரவியது. அது நமது பினோதினி டீச்சர்தான். கழுத்தளவு தண்ணீரில் தத்தளித்து வருவது, பள்ளிக்குதான்.

மழைக்காலங்களில் சபுவா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். அப்போது ஆண்களே நதியை கடக்க பயந்து ஒதுங்கிவிடுவார்கள். ஆனால், ஆற்றை சர்வசாதாரணமாகக் கடந்து பள்ளிக்கு தவறாமல் வந்து விடுவார் பினோதினி. ஆசிரியை பணியில் சேர்ந்த 11 ஆண்டுகளில் இதுவரை ஒரு நாள் கூட பினோதினி விடுமுறை எடுத்ததில்லை. வெயில், மழை, வெள்ளம் என பருவநிலை மாறினாலும், காய்ச்சல், தலைவலி என உடல்நிலை மாறினாலும் எப்படியாவது பள்ளிக்கு வந்து விடுவார். தற்போது 49 வயதாகும் இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. பள்ளி குழந்தைகளுக்கு பினோதினி டீச்சர் என்றால் அவ்வளவு பிரியம்.

இதுகுறித்து பினோதினி கூறுகையில், “ நான் வீட்டில் இருந்து என்ன செய்ய போகிறேன். பள்ளிக்கு சென்றால்தான் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். குழந்தைகளுக்கு பாடம் நடத்தினால்தான் மன நிம்மதி கிடைக்கும். ஆற்றை கடந்து பள்ளிக்கு வந்து நனைந்த துணியை மாற்றி, பள்ளி சீருடை அணிந்து கொள்வேன். முக்கியமான பொருட்கள் நனையாமல் இருக்க பிளாஸ்டிக் பையில் போட்டு வைத்துக் கொள்வேன். மாலை வீடு திரும்பும்போதும் அதேபோல்தான் செய்வேன்” என்கிறார் புன்னகையுடன்..

இது குறித்துப் தென்கனல் ஆட்சியர் புமேஷ் பேஹ்ரா கூறும்போது, பள்ளி ஆசிரியர்கள் இவ்வளவு கஷ்டங்களை எதிர்கொள்கிறார்கள் என்பது குறித்து எனக்குத் தெரியாது. இதுகுறித்த தகவல்களைச் சேகரித்தபின், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளித்து இருக்கார். முதலில் நின்று போன மேம்பாலப் பணிகளை தொடங்க வேண்டும் என்று அந்த ஊர் மக்கள் கோரிக்கை வைக்கிறார்கள். பினோதினி டீச்சருக்கு தலை வணங்குவோம் மாணவர்களே..

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x