Published : 07 Oct 2019 06:34 PM
Last Updated : 07 Oct 2019 06:34 PM

நிகழ்வுகள்: உலக மனநல நாள் அக்டோபர் 10

உலக அஞ்சல் நாள்: அக்டோபர் 9

கடந்த 1874-ல் சுவிட்ஸர்லாந்து தலைநகர் பெர்னில் அனைத்துலக அஞ்சல் ஒன்றியம் (Universal Postal Union) தொடங்கப்பட்டது. இது ஐக்கிய நாடுகள் அமைப்பின் துணை அமைப்புகளில் ஒன்று. இதில் 192 உலக நாடுகள் அங்கம் வகிக்கின்றன. சர்வதேச அஞ்சலகத் துறை நிறுவனங்களிடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவது உலக நாடுகளில் அஞ்சல் பரிமாற்ற நடைமுறைக்கான விதிகளை வகுப்பதும் இவ்வமைப்பின் முக்கியப் பணிகள். இந்த அமைப்பு தொடங்கப்பட்ட நாளை உலக அஞ்சல் நாளாக அனுசரிக்க வேண்டும் என்று 1969-ல் அறிவிக்கப்பட்டது. அதிலிருந்து புதிய அஞ்சலகப் பொருட்கள் மற்றும் சேவைகளை அறிமுகப்படுத்தவும் புதிய தபால்தலைகளை வெளியிடவும் அஞ்சலக சேவைகளை பற்றிய விழிப்புணர்வைப் பரப்பவும் இந்த நாளைப் பயன்படுத்துகின்றன.

உலக மனநல நாள்: அக்டோபர் 10

மனநலப் பிரச்சினைகள் குறித்த உலக மக்களின் விழிப்புணர்வை அதிகரித்தல் மற்றும் மனநலத்தை மேம்படுத்துவதற்கான ஆதரவை ஒருங்கிணைத்தல் ஆகிய நோக்கங்களுடன் அக்டோபர் 10-ம் நாளை உலக மனநல நாளாக ஐநா சபையின் துணை அமைப்பான உலக சுகாதார நிறுவனம் (WHO) 1992 முதல் அனுசரித்துவருகிறது. 2019-ம் ஆண்டுக்கான உலக மனநல நாளின் கருப்பொருள் ‘தற்கொலைத் தடுப்பு’. இந்த நாளில் உலக மக்கள் அனைவரும் தற்கொலைகள் அதிகரித்துவருவது குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கவும் தற்கொலைத் தடுப்புக்கு நாம் அனைவரும் எப்படி பங்களிக்கலாம் என்பதை விளக்கவும் ‘40 நொடிகளை ஒதுக்க வேண்டுகோள் விடுத்துள்ளது. இதற்கு ‘40 seconds of action’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

வேதநாயகம் பிள்ளை பிறந்த நாள்: அக்டோபர் 11

தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் 1826 அக்டோபர் 11 அன்று பிறந்தவர் சாமுவேல் வேதநாயகம் பிள்ளை. இவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை என்று அழைக்கப்படும் இவர் கவிஞராகவும் எழுத்தாளராகவும் விளங்கினார். இவர் எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் என்றகதை நூல் தமிழின் முதல் நாவல் என்று அங்கீகரிக்கப்பட்டது. அந்த நாவலில் பெண் சுதந்திரம் மற்றும் பெண் கல்வியின் முக்கியத்துவத்தைப் போதிக்கும் கருத்துகள் பிரதானமாக இடம்பெற்றிருந்தன. கர்னாடக சங்கீதத்திலும் விற்பன்னராக திகழ்ந்த வேதநாயகம் பிள்ளை பல பாடல்களை இயற்றியுள்ளார்.

தொகுப்பு: கோபால்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x