Published : 11 Sep 2023 05:09 AM
Last Updated : 11 Sep 2023 05:09 AM

போதைப்பொருள் விற்பனை குறித்து போலீசுக்கு தகவல் தெரிவியுங்கள்: மாணவர்களுக்கு டிஎஸ்பி வேண்டுகோள்

தேவிகாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசும் போளூர் துணை காவல் கண்காணிப்பாளர் கோவிந்தராஜ்.

திருவண்ணாமலை

போதைப்பொருள் விற்பனை குறித்து காவல்துறையினருக்கு உடனே தகவல் தெரிவிக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு போளூர் டிஎஸ்பி கோவிந்தராஜ் வேண்டுகோள் விடுத் தார்.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு மற்றும்விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட போளூர் துணை காவல் கண்காணிப்பாளர் கோவிந்தராஜ் பேசியதாவது:

போதை பழக்கத்துக்கு இளைஞர்கள் அதிகளவில் அடிமையாகி வருகின்றனர். இதனால், சமுதாயம் மட்டுமின்றி வீடும், நாடும் சீரழிகிறது. பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டு தலங்கள் அருகே போதை பொருட்கள் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டும், போதைப்பொருட்களை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை.

போதை பொருளை ஒழிக்கபள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மாணவர் களின் எண்ணம் படிப்பில் மட்டும் இருக்க வேண்டும்.ஒழுக்கத்துடன் கூடிய கல்வியை கற்பவர் சமுதாயத்தில் மதிக்கப்படுவார். மாணவர்கள்தான் நாட்டின் வருங்கால சமுதாயம். நீங்கள்தான் நாட்டை காக்க வேண்டியவர்கள். வீடுகள் அருகே உள்ள பெட்டிக்கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்தால் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x