Published : 23 Jun 2023 04:36 AM
Last Updated : 23 Jun 2023 04:36 AM

செய்தித்தாள் படிக்கும் மாணவர்களுக்கு எஸ்எஸ்எல்சி, +2 தேர்வுகளில் 10 மதிப்பெண்கள்: கேரள அரசு அறிவிப்பு

திருவனந்தபுரம்

செய்தித்தாள்கள், புத்தகங்களைப் படிக்கும் மாணவர்களுக்கு எஸ்எஸ்எல்சி மற்றும் 2 தேர்வுகளில் 10 மதிப்பெண்கள் என கேரள அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி கூறியதாவது:

கேரளாவில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு செய்தித்தாள் படிக்கும் பழக்கம் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளில் மதிப்புமிக்க மதிப்பெண்களைப் பெற மாணவர்களுக்கு உதவும்.

மாணவர்களிடையே சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், செய்தித்தாள்கள் மற்றும் புத்தகங்களைப் படிப்பதன் மூலம் பல்வேறு விரிவான அறிவைப் பெற ஊக்குவிப்பதும் இதை அறிமுகப்படுத்துவதன் நோக்கமாகும். தொடர் மதிப்பீட்டின் ஒரு பகுதியாக தற்போது வழங்கப்படும் 20 மதிப்பெண்களில் பாதி, செய்தித்தாள்கள் மற்றும் புத்தகங்கள் படிப்பதில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும்.

தற்போது பள்ளி அளவில் இணை பாடத்திட்ட செயல்பாட்டிற்காக 100 மதிப்பெண்கள் கொண்ட தேர்வுகளில் 20 மதிப்பெண்களும், அதிகபட்சமாக 50 மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு 10 மதிப்பெண்களும் வழங்கப்படுகிறது. செய்தித்தாள்கள் மற்றும் புத்தகங்கள் படிப்பதில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு 10 மதிப்பெண்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பள்ளி முதல் மாநில அளவில் பொதுக் கல்வித் துறை நடத்தும் செய்தித்தாள் வாசிப்புப் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு இந்த மதிப்பெண்கள் வழங்கப்படும். இந்தப்போட்டியானது மலையாளத்தில் உள்ள மூன்று முக்கிய செய்தித்தாள்களை ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் படித்து ஒரு அறிக்கையைத் தயாரிப்பதை பொறுத்து மதிப்பெண்கள் வழங்கப்படும். மாநிலத்தில் முதல்மூன்று இடங்களைப் பிடிப்பவர்களுக்கு மேல்நிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் மற்றும் மேல்நிலைத் தேர்வுகளில் முறையே 10, 17 மற்றும் 14 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x