Published : 21 Jun 2023 04:06 AM
Last Updated : 21 Jun 2023 04:06 AM
தமிழக அரசின் கல்வித் துறை சார்பில், தமிழ் வழி பயிலும் மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக ஆண்டுதோறும் காமராஜர் விருதும்,ரொக்கப் பரிசும் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. கல்வியுடன் தனித்திறன்களில் சிறந்து விளங்கும் எஸ்எஸ்எல்சி மாணவர்களுக்கு விருதும் ரூ.10,000 ரொக்கமும், பிளஸ் 2 மாணவர்களுக்கு விருதுடன் ரூ. 20,000 ரொக்கப் பரிசும் வழங்கப்படுகிறது.
2022-2023-ம் கல்வி ஆண்டில் உடுமலை அரசுப் பள்ளியில் எஸ்எஸ்எல்சி பயின்ற மாணவி கோ.சி.யாழினி,பிளஸ் 2 மாணவி எஸ்.சஹானா பர்வீன்ஆகியோருக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி இவ்விருதுகளை வழங்கி கவுரவித்தார். அவர்கள்படிப்புடன் கராத்தே, ஓவியம், உள்ளிட்ட தனித்திறன்களிலும் சிறந்துவிளங்கியதால் தேர்வாகினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT