Published : 14 Nov 2022 03:53 PM
Last Updated : 14 Nov 2022 03:53 PM

நேரு கடந்த வந்த பாதை | குழந்தைகள் தினம் சிறப்பு பகிர்வு

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் வாழ்க்கையில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்களின் தொகுப்பு இதோ:

  • 1889 - ம் ஆண்டு நவம்பர் 14-ல் உத்திரபிரதேசத்தில் உள்ள அலகாபாத்தில், மோதிலால் நேரு- சொரூப ராணி ஆகியோ ருக்கு மகனாக ஜவஹர்லால் நேரு பிறந்தார். 13-ம் வயதில் அன்னிபெசன்ட் அம்மையாரின் “பிரம்ம ஞான சபை” கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார்.
  • 1910 - ம் ஆண்டு இயற்கை அறிவியலில் ஹானர்ஸ் பட்டம் பெற்றார்.

  1. 1912 - ல் லண்டனில் வழக்கறிஞர் தேர்வில் வெற்றி பெற்று பிரிட்டனில் பணியாற்றிக் கொண்டு இருக்கின்றபோதே நேருவிற்கு இந்திய அரசியல் மீது ஆர்வம் ஏற்பட்டது.
  2. 1913 - ம் ஆண்டு காந்தியடிகளின் பொது உரிமை போராட்டத்திற்கு நிதி வசூலித்துக் கொடுத்தார்.

  • 1916 - ம் ஆண்டு லக்னோ காங்கிரஸ் மாநாட்டில் நேரு முதன் முறையாக காந்தியை சந்தித்தார்.
  • 1917 - ம் ஆண்டு அன்னிபெசன்ட் தொடங்கிய தன்னாட்சி இயக்கத்தின் செயலாளர் ஆனார்.
  • 1919 - ம் ஆண்டு “இன்டிபென்டன்ட்” இதழை தன்னுடைய தந்தை மோதிலால் நேருவுடன் இணைந்து ஆரம்பித்தார்.
  • 1920 - ல் உத்திரபிரதேசத்தில் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தில் நேரு இணைந்தார்.
  • 1921 - ம் ஆண்டு அரசாங்கத்திற்கு எதிராக நேரு செயல்பட்டார் என்பதற்காக கைது செய்யப்பட்டார்.
  • 1923 - ல் ஹிந்துஸ்தானி சேவா தளத்தை ஹர்டிகர் உடன் இணைந்து ஆரம்பித்தார்.

  • 1926 - ம் ஆண்டு காந்தியின் வழிகாட்டுதலால் இந்திய காங்கிரஸ் இயக்கத்தை தொடக்கி தலைமை பொறுப்பேற்று வழிநடத்தினார்.
  • 1927 - ம் ஆண்டு மாஸ்கோவில் நடைபெற்ற ரஷ்யப் புரட்சியின் 10-ம் ஆண்டு விழாவில் பங்கேற்றார். ‘‘சோவியத் ரஷ்யா’’ என்ற நூலை எழுதினார். டிசம்பர் மாதம் குடும்பத்தினரோடு இந்தியாவுக்கு திரும்பினார். சென்னையில் நடைபெற்ற 42-வது காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டார்.

  • 1928 - ம் ஆண்டு Independence India Leagueஅமைப்பை தொடங்கினார்.
  • 1929 - ம் ஆண்டு ராவி நதிக்கரையில் நடைபெற்ற லாகூர் காங்கிரஸ் மாநாட்டில் முழுச் சுதந்திர தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  • 1930 ஜனவரி 26 சுதந்திரம் கோரி இந்திய சுதந்திரக் கொடி நேருவால் லாகூரில் பறக்கவிடப்பட்டது. ஏப்ரல் 14 உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தில் கலந்து கொண்டபோது உப்பு காய்ச்ச முயன்றதற்காக நேரு கைது செய்யப்பட்டு, ஆறு மாத காலம் அலகாபாத் நைனி சிறையில் இருந்தார்.
  • 1935 - ம் ஆண்டு அனைத்து இந்திய மக்கள் மாநில மாநாட்டின் தலைவராக தேர்வானார்.
  • 1938 - ம் ஆண்டு தேசிய திட்ட கமிட்டியின் தலைவராக தேர்வானார்.

  • 1942 காந்தியடிகள் “நேருவே என் வாரிசு” என்று குறிப்பிட்டார்.
  • 1942 ஆகஸ்ட் 8-ம் நாள் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் நேரு கைது செய்யப்பட்டார். நேரு சிறைக்கு சென்ற ஒன்பதாவது முறையும் கடைசி முறையும் ஆகும். இவர் மொத்தம் 3262 நாட்கள் சிறையில் இருந்தார்.
  • 1945 ஜூன் 15-ம் நாள் விடுதலை செய்யப்பட்டார்.
  • 1947 - ம் ஆண்டு ஆகஸ்ட்15-ம் தேதி 12 மணி நள்ளிரவில் இந்தியா விடுதலை பெற்றது. புதுடெல்லியில் சுதந்திர இந்தியாவின் கொடியை ஏற்றும் தனிப்பெருமை நேருவுக்கு வழங்கப்பட்டது. விடுதலை பெரும்போது அவர் ‘விதியோடு ஒரு ஒப்பந்தம்’ என தொடங்கும் உரை நிகழ்த்தினார்.

1947 ஆகஸ்ட் 15-ம் தேதி அன்று இந்தியாவின் முதல் பிரதமராக ஜவஹர்லால் நேரு பதவியேற்றார். அப்பொழுது அவர் பேசியதாவது “உலகமே உறங்கிக் கொண்டு இருக்கும் பொழுது நம் தேசம் விடுதலையை நோக்கி விழித்து எழுகிறது” என பேசினார்.

  • 1947 முதல் 1964 வரை சுதந்திர இந்தியாவின் பிரதமராகப் பணியாற்றினார்.
  • 1948 ஜனவரி 30-ம் நாள் காந்தியடிகள் கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பதை அன்றிரவு வானொலியில் நேரு உருக்கமாக அறிவித்தார்.
  • 1949 அக்டோபர் 7-ம் தேதி அமெரிக்க அதிபர் ட்ரூமன் அழைப்பிற்கு இணங்கி அமெரிக்காவுக்குச் சென்று யு.எஸ். பேரவையில் உரை நிகழ்த்தினார். கொலம்பியா பல்கலையில் நேருவுக்கு “டாக்டர்” பட்டம் வழங்கி சிறப்பித்தது.
  • 1951 நவம்பர் 22-ல் இந்தியாவின் முதலாவது பொதுத்தேர்தலைப் பற்றி வானொலி மூலம் பிரதமர் நேரு அறிவித்தார். முதல் பொதுத்தேர்தலில் அலகாபாத் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார்.

  • 1955 - ம் ஆண்டு ஜூலை 15 அன்று இந்தியக் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் நேருவிற்கு பாரத ரத்னா விருது வழங்கிப் பாராட்டினார்.
  • 1962 - ம் ஆண்டு மூன்றாம் பொதுத் தேர்தல் நடைபெற்றது. பெரும்பான்மையான இடங்களை மீண்டும் காங்கிரஸ் கைப்பற்றியது. நேரு மூன்றாம் முறையாக இந்தியாவின் பிரதமர் ஆனார் நேரு.

1964 - ம் ஆண்டு மே 27 நேருவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து மாரடைப்பால் மரணமடைந்தார்.

தொகுப்பு: ஸ்ரீ.பாக்யலஷ்மி ராம்குமார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x