Last Updated : 12 Mar, 2020 12:47 PM

 

Published : 12 Mar 2020 12:47 PM
Last Updated : 12 Mar 2020 12:47 PM

பிரெஞ்சுப் பின்னணியோடு புதுச்சேரியில் ராட்சத பொம்மலாட்டப் பயிற்சி

பிரெஞ்சு கலாச்சாரப் பின்னணியிலான ராட்சத பொம்மலாட்ட நிகழ்ச்சி புதுச்சேரியில் நடைபெற இருப்பதையொட்டி அதற்கான பயிற்சியில் கலைஞர்களுடன் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சிறிய அளவிலான பொம்மைகளைக் கொண்டு திரைக்குப் பின்னால் நடைபெறும் பொம்மலாட்ட காட்சிகளை மட்டுமே நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் பிரம்மாண்ட பொம்மைகளைக் கொண்ட பொம்மலாட்ட நிகழ்ச்சி பிரான்ஸ் நாட்டின் பாரம்பரியங்களில் ஒன்று. இந்தக் கலை நிகழ்ச்சியை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த "லே கிரேண்ட் பர்சன்ஸ்" என்ற கலைக்குழுவினர் புதுச்சேரியில் நடத்த உள்ளனர்.

இதற்கான பயிற்சி மற்றும் பொம்மைகளை உருவாக்கும் நிகழ்ச்சி புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. 20 அடி உயரம் கொண்ட ஒவ்வொரு பொம்மையின் எடை சுமார் 20 கிலோ. பிரான்ஸில் இருந்து கொண்டுவரப்பட்ட இரண்டு பொம்மைகளோடு, புதுச்சேரி கலாச்சாரத்துக்கு ஏற்ப மேலும் சில பொம்மைகளும் உருவாக்கப்பட்டு வருகின்றன.

இதற்கான பயிற்சியில் புதுச்சேரி பள்ளி மாணவர்களும் பல்கலைக்கழக மாணவர்களும் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவில் புகழ்பெற்ற கர்ணன், காஞ்சனா என்ற இரண்டு கதாபாத்திரங்கள் இங்கு உருவாக்கப்பட்டுள்ளன.

பொம்மைகளை உருவாக்கி வரும் பல்கலைக்கழக முனைவர் பிரேம்நாத் இதுகுறித்துக் கூறும்போது, ''செல்போன்தான் உலகம் என வெளி உலகத்தை மறந்து, களச் சூழலையும் மறந்து அன்றாட வாழ்க்கையின் பல்வேறு பிரச்சனைகளில் மனிதன் சிக்கித் தவிக்கிறான். அவனது மனதை இலகுவாக்க இந்த பொம்மலாட்ட நிகழ்ச்சி பயனளிக்கும்'' என்றார்.

புதுச்சேரியில் முதல் முறையாக வரும் 20-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை இந்த ராட்சத பொம்மலாட்ட நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் புதுச்சேரி கலைஞர்களுடன் பிரெஞ்சு கலைஞர்கள் இந்த பொம்மலாட்டத்தை நிகழ்த்த உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x