Published : 23 Jan 2020 10:11 AM
Last Updated : 23 Jan 2020 10:11 AM

‘இன்ஸ்பயர்' விருது அறிவியல் கண்காட்சி

திருப்பூர்

பள்ளி மாணவர்களின் அறிவியல்ஆர்வத்தை மேம்படுத்தும் வகையில், இந்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை ‘இன்ஸ்பயர்’ விருதுக்கு அழைப்பு விடுத்திருந்தது. திருப்பூர் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள்இணையத்தில் விண்ணப்பித்திருந்தனர்.

அவர்களில் 113 பேரை இந்திய தொழில்நுட்பத் துறை தேர்வுசெய்து அவர்களுக்கு தலா ரூ.10,000 வழங்கியது. அந்த பணத்தை கொண்டு மாணவர்கள் அறிவியல் படைப்புகளை உருவாக்கினர்.

இந்நிலையில், ‘இன்ஸ்பயர்’ விருதுக்கான அறிவியல் கண்காட்சி திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. கண்காட்சியை மாவட்ட முதன்மைகல்வி அலுவலர் ரமேஷ் தொடங்கிவைத்து பார்வையிட்டார்.

இதில், இயற்கை விவசாயம்,வீட்டின் கழிவுநீரை உபயோகமான நீராக பயன்படுத்துவது, சூரிய ஒளி மின்சாரம் உள்ளிட்ட 113 படைப்புகள் இடம்பெற்றன.

அவற்றை நடுவர் குழு ஆய்வு செய்தது. இதில், பைசர் ரகுமான், இந்திரதேஜா, அஜய், ரோகித், புனிதா, அக் ஷய், ஹரிஹரன், தீபக் சுந்தர், கோகிலா, பாரத், சந்தியா ஆகியோரின் 11 படைப்புகள் மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x