Published : 09 Dec 2019 10:20 AM
Last Updated : 09 Dec 2019 10:20 AM

போக்குவரத்து விதிகள், பாதுகாப்பு குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

சாலைப் போக்குவரத்து விதிகள், பாதுகாப்பு குறித்து காவல் துறை சார்பில் பொய்யாதநல்லூர் பள்ளியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அரியலூர் மாவட்ட எஸ்பி ஆர்.ஸ்ரீனிவாசன் உத்தரவின்பேரில், செந்துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொய்யாதநல்லூர் அரசுஉயர்நிலைப் பள்ளியில் காவல் ஆய்வாளர் ராஜ்குமார் தலைமையிலான போலீஸார், சாலைப் போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மாணவர்கள் சாலையைக் கடக்கும்போது இருபுறமும் பார்த்துவிட்டு வாகனங்கள் வரவில்லை என்பதை உறுதி செய்த பிறகே கடந்து செல்ல வேண்டும். சாலையில் நடந்து செல்லும்போது கண்டிப்பாக இடது பக்கம் மட்டுமே செல்ல வேண்டும். இருசக்கர வாகனங்களை ஓட்டும்போது மது அருந்தக்கூடாது, கட்டாயம்தலைக்கவசம் அணிய வேண்டும் என உங்களின் பெற்றோர், உடன்பிறந்தவர்கள் மற்றும் உறவினர்களுக்கு நீங்கள் வலியுறுத்த வேண்டும். குறிப்பாக மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவருடன் நீங்கள் கட்டாயம் செல்லக்கூடாது எனமாணவ, மாணவிகளிடம் அறிவுறுத்தினர்.

இதேபோல, ஜெயங்கொண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உட்கோட்டை கிராமத்திலுள்ள உயர்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு ஜெயங்கொண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரமேஷ்பாபு தலைமையிலான போலீஸார் சாலைப் போக்குவரத்து விதிகள், பாதுகாப்பு மற்றும் தலைக்கவசம் அணிய வேண்டியதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x