Published : 25 Nov 2019 08:24 AM
Last Updated : 25 Nov 2019 08:24 AM

இந்திய கிரிக்கெட் வரலாறு: 21 வயது இளம் கேப்டன்

பி.எம்.சுதிர்

1947-ம் ஆண்டுவரை இந்தியாவுடன் ஒருங்கிணைந்து ஆடியபாகிஸ்தான் வீரர்கள், அதன்பிறகு தனி அணியாக செயல்படத் தொடங்கினார்கள். 1947-ம் ஆண்டு முதல் பாகிஸ்தான் அணி, பல்வேறு நாடுகளுக்கு எதிரான போட்டிகளில் ஆடினாலும், அந்தஅணிக்கு டெஸ்ட் போட்டிகளில் ஆடும் அந்தஸ்து கிடைக்கவில்லை. நீண்டகால போராட்டத்துக்கு பிறகு 1952-ம் ஆண்டில்தான் அந்த அணிக்கு முதல் முறையாக டெஸ்ட் போட்டிகளில் ஆடும் அந்தஸ்து கிடைத்தது.

பாகிஸ்தான் அணிக்கு டெஸ்ட் போட்டிகளில் ஆடும் அந்தஸ்து கிடைப்பதற்காக இந்திய கிரிக்கெட் வாரியமும்கடுமையாக போராடி இருந்தது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அந்நாட்டு டெஸ்ட் கிரிக்கெட் அணி, இந்தியாவில் முதல்பயணத்தை மேற்கொண்டது. இந்தத் தொடர் கடும் போட்டி நிறைந்ததாக இருந்தது. 5 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட இந்த தொடரைஇந்திய வீரர்கள் கடுமையாக போராடி 2-1 என்ற கணக்கில் வென்றனர். இரு போட்டிகள் சமனில் முடிந்தன. இப்படியாக இந்தியஅணி தனது முதல் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது.

இந்த தொடருக்குப் பிறகு இந்திய அணியின் கிரிக்கெட் பயணத்தில் பல ஆண்டுகளுக்கு சுவாரஸ்யமான விஷயங்கள் ஏதும்நடைபெறவில்லை. அதே நேரத்தில் உலக அளவில் மாற்றங்கள் ஏற்பட்டன. இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் ஆதிக்கம் செலுத்திவந்த டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில், புதிதாக மேற்கிந்திய தீவுகள்அணி பலம் பெற்று வந்தது. வோரல் என்ற கேப்டனின் தலைமையில் அதிரடி பேட்டிங் மற்றும் அசரவைக்கும் வேகப்பந்து வீச்சின் மூலம் கிரிக்கெட் உலகையே அந்த அணி ஆட்டிப்படைக்க தொடங்கியது. அதே காலக்கட்டத்தில் இந்திய கிரிக்கெட்டிலும் மாற்றங்கள் நிகழ்ந்தன. நிதானமாக ஆடும் பேட்ஸ்மேன்களை மட்டுமேகொண்டிருந்த இந்திய அணியில் அதிரடி பேட்ஸ்மேன்களும் நுழையத் தொடங்கினர். இந்த புதிய தலைமுறை வீரர்களில் முதலாவதாக அறிமுகமானவர் மன்சூர் அலிகான் பட்டோடி.

மேற்கிந்திய தீவுகள் அணியின் புகழ் உச்சத்தில் இருந்த சமயத்தில், சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திக்கச் சென்றது இந்திய அணி. நாரி காண்டிராக்டர் தலைமையில் சென்ற இந்த அணியின் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார் பட்டோடி. 3 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடியிருந்த, 21 வயதான பட்டோடிக்கு துணைக் கேப்டன் பதவி வழங்கப்பட்டதில் அணிக்குள்முணுமுணுப்பு எழுந்தது.

இந்த சமயத்தில் அங்கு நடந்த பயிற்சிப் போட்டியில் கிரிஃபித் வீசிய பந்து நாரி காண்டிராக்டரின் தலையைத் தாக்க, அவர் சுருண்டு விழுந்தார். இதனால் தலைமை இல்லாமல் இந்திய அணிதடுமாற, பட்டோடிக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டது. அப்போது அவரது வயது 21 மட்டுமே. இப்படியாக மிக இளைய வயதில் இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார் பட்டோடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x