ஊட்டி தாவரவியல் பூங்காவில் விளையாடி மகிழும் சுற்றுலா பயணிகள். | படம்: ஆர்.டி.சிவசங்கர் | 

ஊட்டி தாவரவியல் பூங்காவில் விளையாடி மகிழும் சுற்றுலா பயணிகள். | படம்: ஆர்.டி.சிவசங்கர்

கோடை சீசனுக்காக ரூ.28 லட்சத்தில் தயாராகும் ஊட்டி தாவரவியல் பூங்கா

Published on

ஊட்டி: கோடை சீசனுக்​காக ஊட்டி தாவர​வியல் பூங்கா தயா​ராகி வரும் நிலை​யில், நிகழாண்​டில் புதி​தாக ரூ.28 லட்​சம் செல​வில் இசை நீரூற்​று, நடை மேம் பாலம் அமைக்​கப்​படு​கிறது.

சர்​வ​தேச சுற்​றுலாத் தலமான ஊட்​டிக்கு வரும் சுற்​றுலாப் பயணி​களை கவர, கோடைகாலத்தில் மாவட்ட நிர்​வாகம், சுற்​றுலாத் துறை, தோட்​டக்​கலைத்துறை இணைந்து கோடை விழா நடத்​தப்​படும்.

ஊட்டி மலர்க் கண்​காட்சி உலக பிரசித்திபெற்​றது என்​ப​தால் இதனைக் காண, உள்​நாடு மற்​றும் வெளி​நாடு​களி​லிருந்து பல்​லா​யிரக்​கணக்​கான சுற்​றுலாப் பயணி​கள் வரு​வார்​கள்.

இந்​நிலை​யில், சுற்​றுலாப் பயணி​களை கவரும் வகை​யில் இந்​தாண்டு பூங்கா முழு​வதும் உள்ள பாத்​தி​களில் 275 ரகங்​களில் சுமார் 10 லட்​சம் மலர் செடிகள் நடவு செய்​யப்​பட்டு வரு​கின்​றன.

மேலும், சுற்​றுலாப் பயணி​களை கவர, 35 ஆயிரம் தொட்​டிகளி​லும் மலர் செடி நடவு செய்​யப்​படு​கிறது. மே மாதம் 128-வது மலர்க் கணக்​காட்சி நடை​பெற உள்​ளது. ஊட்டி அரசு தாவர​வியல் பூங்​கா​வில் இதற்​கான ஆயத்த பணி​கள் இப்​போதே தொடங்​கி​யுள்​ளன.

மேலும், கோடை சீசன் ​போது ஊட்டி வரும் சுற்​றுலாப் பயணி​களை கவரும் வகை​யில் தாவர​வியல் பூங்​கா​வில் பல்​வேறு அலங்​காரங்​கள் செய்​யப்​படும். இம்​முறை ரூ.8 லட்​சம் செல​வில் பூங்கா நடு​வில் உள்ள குளத்​தில் இசை நீரூற்று அமைக்​கப்​படு​கிறது.

இப்​பணி​கள் ஓரிரு நாட்​களில் தொடங்க உள்​ளது. இதேபோல், நிகழாண்​டில் புதி​தாக, ஜப்​பான் பூங்கா அருகே உள்ள இரு குளங்​களுக்கு இடையே ரூ.20 லட்​சம் செல​வில் நடை மேம்​பாலம் அமைக்​கப்​படு​கிறது.

இதே​போல் பல்​வேறு பூங்​காக்​களி​லும் தோட்​டக்​கலைத் துறை சார்​பில் மேம்​பாட்​டுப் பணி​கள் மேற்​கொள்​ளப்பட உள்​ள​தாக அதி​காரி​கள் தெரிவித்​தனர்​.

<div class="paragraphs"><p>ஊட்டி தாவரவியல் பூங்காவில் விளையாடி மகிழும் சுற்றுலா பயணிகள். | <em>படம்: ஆர்.டி.சிவசங்கர்</em> |&nbsp;</p></div>
ஊத்தங்கரை அருகே விவசாயி படுகொலை: மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in