Published : 15 Nov 2021 07:11 AM
Last Updated : 15 Nov 2021 07:11 AM

பெரியாறு அணை நீர்மட்டம் 140 அடியை எட்டியது: : அபாய எச்சரிக்கை அறிவிப்பு :

முல்லை பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் நேற்று காலை 140 அடியை எட்டியது. இதனால் பொதுப்பணித் துறையினர் முதல் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவித்துள்ளனர்.

நீர்ப்பிடிப்புப் பகுதியில் மழையால் அணைக்கு விநாடிக்கு 4,400 கன அடி நீர்வரத்துஉள்ளது. 1,867 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

தமிழகப் பகுதியில் அதிகபட்சம் விநாடிக்கு 2,500 கன அடி நீர் மட்டுமே வெளியேற்றும் வசதியால் நீர்வரத்து கண்காணிக்கப்படுகிறது.

விவசாயிகள் சங்கத்தினர் கூறும்போது, கடந்த மாதம் நீர்வரத்தும், நீர்மட்டமும் உயர்ந்தாலும் கேரளத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் 142 அடியை எட்ட முடியவில்லை. இம்முறை நீர் வெளியேற்றத்தைக் குறைத்து 142 அடி அளவுக்கு நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x