Published : 07 Nov 2021 03:06 AM
Last Updated : 07 Nov 2021 03:06 AM

2022-ம் ஆண்டு நீட் தேர்வுக்கு பயிற்சி பெற - கேரியர் பாயின்ட் ஆன்லைன் வகுப்புகள் : தமிழகத்தில் குறைந்த கட்டணத்தில் லிம்ரா வழங்குகிறது

2022 நீட் தேர்வுக்கான ஓராண்டுஆன்லைன் பயிற்சிக்கு கேரியர் பாயின்ட் நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த வகுப்புகளை சென்னை லிம்ரா ஓவர்சீஸ் கன்சல்டன்ட்ஸ் குறைந்த கட்டணத்தில் தமிழகத்தில் வழங்குகிறது.

நீட் தேர்வுக்கு பயிற்சி அளிப்பதில் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் இயங்கும் கேரியர் பாயின்ட் முதல் இடம் பெற்றுள்ளது. சமீபத்தில் வெளியான நீட் 2021 முடிவுகளில் அகில இந்திய அளவில் முதல் 50 இடத்தில்கேரியர் பாயின்ட் மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர். முதல் 1,000 இடங்களில் 550 மாணவர்கள் இடம்பிடித்துள்ளனர். மாநில அளவில் கேரியர் பாயின்ட் மாணவர்கள் 16 பேர் முதலிடம் பிடித்துள்ளனர்.

மொத்தத்தில் வகுப்புகளில் படித்த 9,622 பேர், ஆன்லைனில் படித்த 7,166 பேர் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்நிலையில், 2022 நீட் தேர்வு பயிற்சிக்கு மாணவர் சேர்க்கை தற்போது நடக்கிறது. பிளஸ் 1, பிளஸ் 2படிப்பவர்கள், ஏற்கெனவே நீட்தேர்வு எழுதி மதிப்பெண் குறைவாக பெற்றவர்கள் சேரலாம்.

ஆன்லைனில் இந்த வகுப்புகள் காலையிலும், மாலையிலும் நடைபெறும். வார இறுதி நாட்களில் சந்தேகங்கள் தீர்க்கும் அமர்வுகள் நடத்தப்படும். பாடங்கள் நடத்தப்பட்ட வீடியோ வகுப்பறை காணொலிக் காட்சிகள் வரையறை இன்றி வழங்கப்படும். அடுத்தநீட் தேர்வு நடைபெறும் வாரம் வரை இப்பயிற்சி வழங்கப்படும்.

மருத்துவக் கல்விப் பிரிவில் கடந்த 19 ஆண்டுகளாக இயங்கி,1,200 மருத்துவர்களை உருவாக்கிய சென்னை லிம்ரா நிறுவனம் இதற்கான சலுகை கட்டணமாக தமிழக மாணவர்களுக்கு மட்டும் ரூ 49,999 நிர்ணயம் செய்துள்ளது. மற்ற நிறுவனங்கள் குறைந்தது ரூ. 1 லட்சம் முதல் ரூ.1.80 லட்சம் வரை வசூலிக்கின்றன.

மிக குறைந்த கட்டணத்தில் நீட்2022 பயிற்சியில் சேர லிம்ரா நிறுவனத்தை 9444615363 / 9952922333 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். சென்னை அலுவலக முகவரி: லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன், 177, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, எஸ்எம்எஸ் சென்டர், மயிலாப்பூர் சென்னை 600004. இவ்வாறு லிம்ரா நிறுவனம் தெரிவித்துள்ளது. l

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x