Published : 01 Nov 2021 03:06 AM
Last Updated : 01 Nov 2021 03:06 AM

கோயில் பணியாளர்களை - பணிவரன்முறை செய்ய அரசாணை :

இந்து சமய அறநிலையத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:

அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் தினக்கூலி மற்றும் தொகுப்பூதிய அடிப்படையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 1,221 தற்காலிகப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றார்கள்.

அவர்களில் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் 265 பேர், 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் 956 பேர்.

கோயில் பணியாளர்கள் விதிகள் 2020-ன்படி, பணியாளர்கள் நேரடியாக நியமனம் செய்வதற்கான வயது வரம்பு, காலி பணியிடங்கள் அறிவிப்பு வெளியிடப்பட்ட ஆண்டின் ஜூலை முதல்தேதியில் 35 வயது நிறைவுசெய்தவராக இருக்கக் கூடாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, 35 வயதுக்கு மேற்பட்ட பணியார்களுக்கு காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்து, பணிவரன்முறை செய்வதற்கான வயது வரம்பை தளர்வு செய்து, அரசாணை பிறப்பிற்குமாறு ஆணையர் கேட்டுக்கொண்டார்.

அதன்பேரில், 5 ஆண்டுகளுக்கு மேலாக தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் பணியாளர்களை சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு பணிவரன்முறை செய்யஅரசு உத்தரவிட்டுள்ளது. இதனால்1,221 குடும்பங்களின் வாழ்வா தாரம் பாதுகாக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x