Published : 28 Sep 2021 03:18 AM
Last Updated : 28 Sep 2021 03:18 AM

117-வது பிறந்தநாளை முன்னிட்டு - சி.பா.ஆதித்தனாருக்கு முதல்வர் ஸ்டாலின் புகழாரம் : அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள் மலர் தூவி மரியாதை

சி.பா.ஆதித்தனார் பிறந்தநாளையொட்டி, சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலை முன்பு அலங்கரித்து வைக்கப்பட்ட உருவப் படத்துக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், மு.பெ.சாமிநாதன், கீதாஜீவன், தமிழ் வளர்ச்சி, செய்தித் துறை செயலர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநர் வீ.ப.ஜெயசீலன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

சென்னை

‘தினத்தந்தி’ நாளிதழின் நிறுவனர் சி.பா.ஆதித்தனார் 117-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது.

இதையொட்டி முதல்வர்ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழ் இதழியலின் முன்னேர் சி.பா.ஆதித்தனாரின் 117-வது பிறந்தநாள். தினத்தந்தி தொடங்கி எளிய மக்களுக்கு எழுத்தறிவித்து உலக நடப்புகளை அறியத் தந்தார். திமுக அரசில் சட்டப்பேரவைத் தலைவராகவும், அமைச்சராகவும் திறம்பட செயலாற்றியவர். அறம் பிறழாது செய்தி வெளியிடுவதே அவரைப் போற்றுவதாகும்’ என்று தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூர் ஆதித்தனார் சாலையில் உள்ள அவரதுசிலை முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப் படத்துக்கு அரசு சார்பில் அறநிலையத் துறைஅமைச்சர் சேகர்பாபு, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், சமூகநலத் துறை அமைச்சர் கீதாஜீவன், தமிழ் வளர்ச்சி, செய்தித் துறை செயலர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநர் வீ.ப.ஜெயசீலன், எம்எல்ஏக்கள், உயர் அதிகாரிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், க.பாண்டியராஜன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ்தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும்நிர்வாகிகள் திருநாவுக்கரசர், செல்வப் பெருந்தகை, கோபண்ணா,தமாகா தலைவர் ஜி.கே.வாசன்,நாம் தமிழர் கட்சி தலைமைஒருங்கிணைப்பாளர் சீமான்,விடுதலைச் சிறுத்தைகள் தலைவர்திருமாவளவன், மநீம துணைத் தலைவர் மவுரியா, அமமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செந்தமிழன், பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழகத்தலைவர் எர்ணாவூர் நாராயணன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா உள்ளிட்டோரும் ஆதித்தனார் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x