Published : 14 Aug 2021 03:18 AM
Last Updated : 14 Aug 2021 03:18 AM

5 ஆண்டுகளில் 45,000 ஏக்கரில் நில வங்கித் தொகுப்புகள் :

தமிழக பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது: 2018-ம் ஆண்டு தமிழ்நாடு தொழில் வசதி சட்டத்தை திருத்தி, சுய சான்றிதழின் அடிப்படையில் ஆய்வுகள் இல்லாமல், பல்வேறு மாநில சட்டத்தின்கீழ், அனுமதி பெற்று முதல் 3 ஆண்டுகளில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உட்பட புதிய தொழிற்சாலைகளை அமைத்து செயல்பட வழிவகை செய்யப்படும்.

அதிக அளவிலான முதலீடுகளை ஊக்குவிக்க புலம்பெயர் தமிழர்களுடனான உறவு வலுப்படுத்தப்படும்.

முதலீட்டாளர்களின் முதலீடு சார்ந்த முடிவுகளுக்கு ஆதரவு அளிப்பதற்காகவும், சிறப்பாக திட்டமிடுவதற்கும், மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைகளைப் பற்றி விவரமான, துல்லியமான தரவுதளம் உருவாக்கப்படும்.

தமிழகத்தில் தொழில்துறையில் பின்தங்கிய மாவட்டங்களை மையமாகக் கொண்டு, அடுத்த 5 ஆண்டுகளில் மொத்தம் 45,000 ஏக்கர் அளவிலான நில வங்கித் தொகுப்புகள் உருவாக்கப்படும். தமிழகத்தின் தொழிலகப் பயன்பாட்டுக்கான நில எடுப்புச் சட்டம் மேலும் எளிமைப்படுத்தப்பட்டு, நிலத் தொகுப்புக்கள் மற்றும் தனியாருடனான பேச்சுவார்த்தை மூலம் நில எடுப்பு ஊக்குவிக்கப்படும். தொழில்சார் நோக்கத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விரைவாகவும், உரியவாறாகவும் பயன்படுத்துவது உறுதி செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x