Published : 14 Jun 2021 03:12 AM
Last Updated : 14 Jun 2021 03:12 AM

சென்னை, கோவை, காஞ்சிபுரம், தேனி உள்பட 24 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம் : தலைமைச் செயலர் இறையன்பு அறிவிப்பு

சென்னை, கோவை உள்ளிட்ட 24 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக தலைமைச் செயலர் வெ.இறையன்பு நேற்றுவெளியிட்ட அறிவிப்பு: ஒருங்கிணைந்த கல்வி மேம்பாட்டுத் திட்ட இயக்குநர் கவிதா ராமு,புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராகவும், தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய திட்ட இயக்குநர் எஸ்.கோபால சுந்தரராஜ், ராமநாதபுரம் ஆட்சியராகவும், ராமநாதபுரம் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவெர், தஞ்சாவூர் ஆட்சியராகவும், வேளாண்மை விற்பனைத் துறை இயக்குநர் கே.வி.முரளிதரன், தேனி ஆட்சியராகவும், தமிழ்நாடு சாலைப்பிரிவு திட்ட இயக்குநர் ஏ.அருண் தம்புராஜ், நாகப்பட்டினம் ஆட்சியராகவும், பொதுத்துறை இணைச் செயலர்ஏ.ஆர்.ராகுல் நத், செங்கல்பட்டுஆட்சியராகவும் நியமிக்கப்பட்டுள் ளனர்.

தமிழ்நாடு சிமென்ட் கழக மேலாண்மை இயக்குநர் எம்.ஆர்த்தி, காஞ்சிபுரம் ஆட்சியராகவும், சென்னை மாநகராட்சி துணைஆணையர் (சுகாதாரம்) ஆல்பி ஜான்வர்கீஸ், திருவள்ளூர் ஆட்சியராகவும், தமிழ்நாடு மாநிலவிற்பனைக் கழக முன்னாள் மேலாண்மை இயக்குநர் டி.மோகன், விழுப்புரம் ஆட்சியராகவும், சென்னை மாநகராட்சி மண்டல இணை ஆணையர் (மத்தியம்) பி.என்.தர், கள்ளக்குறிச்சி ஆட்சியராகவும், கோவை மாநகராட்சி ஆணையர் பி.குமாரவேல் பாண்டியன், வேலூர் ஆட்சியராகவும், தமிழ்நாடு வீட்டு வசதிவாரிய மேலாண்மை இயக்குநர்பி.முருகேஷ், திருவண்ணாமலை ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டுள் ளனர்.

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் கூடுதல் இயக்குநர் அமர் குஷாவா, திருப்பத்தூர் ஆட்சியராகவும், விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா சிங், நாமக்கல் ஆட்சியராகவும், மதுரை மாநகராட்சி ஆணையர் எஸ்.விஷாகன் திண்டுக்கல் ஆட்சியராகவும், தென்காசி ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், கோயம்புத்தூர் ஆட்சியராகவும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக இணை மேலாண்மை இயக்குநர் எஸ்.வினீத், திருப்பூர் ஆட்சியராகவும், இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் பி.ரமண சரஸ்வதி, அரியலூர் ஆட்சியராகவும், சென்னைப் பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரிய செயல் இயக்குநர் டி.பிரபுசங்கர், கரூர் ஆட்சியராகவும் நியமிக்கப் பட்டுள்ளனர்.

சென்னை மாநகராட்சி துணை ஆணையர் ஜெ.மேகநாத ரெட்டி, விருதுநகர் ஆட்சியராகவும், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் ஜெ.விஜயராணி, சென்னை மாவட்ட ஆட்சியராகவும், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழக செயல் இயக்குநர் ஜெ.யு.சந்திரகலா, தென்காசி ஆட்சியராகவும், தேனி ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணன் உன்னி, ஈரோடு ஆட்சியராகவும், கோவை வணிக வரிகள் இணை ஆணையர் பி.காயத்ரி கிருஷ்ணன், திருவாரூர் ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்

நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன்பி.நாயர், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் இயக்குநராகவும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டிஎன்பிஎஸ்சி) தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ஆர்.சுதன், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட மாநில திட்டஇயக்குநராகவும், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஏ.அண்ணா துரை, வேளாண்மைத் துறைஇயக்குநராகவும், வேலூர் மாவட்ட ஆட்சியர் ஏ.சண்முகசுந்தரம் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராகவும், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் எம்.பி.சிவன்அருள் பதிவுத் துறைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கோவை ஆட்சியர் எஸ்.நாகராஜன், நில நிர்வாக ஆணையராகவும், திருவள்ளூர் ஆட்சியர் பி.பொன்னையா நகராட்சி நிர்வாகஇயக்குநராகவும், திருவண்ணாமலை ஆட்சியர் சந்தீப் நந்தூரி சுற்றுலாத் துறை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநராகவும், வணிக வரிகள் (நிர்வாகம்) கூடுதல் ஆணையர் கே.லட்சுமிபிரியா தொழில்நுட்பக் கல்வி இயக்குநராகவும், நில அளவை ஆணையர் ஆர்.செல்வராஜ் பேரூராட்சிகள் ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை மாநில திட்ட இயக்குநர் ஜி.லதா ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராகவும், தமிழ்நாடு மேக்னசைட் (சேலம்) நிறுவன மேலாண்மை இயக்குநர் ஆர்.பிருந்தா தேவி தோட்டக்கலைத் துறை இயக்குநராகவும், தொழிலாளர் துறை ஆணையர் எம்.வள்ளலார் வேளாண் விற்பனைத் துறை ஆணையராகவும், முதல்வரின் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரி ஏ.சரவணவேல்ராஜ் நகர் மற்றும் ஊரமைப்பு துறை இயக்குநராகவும், சேலம் பட்டு வளர்ப்பு இயக்குநர் டி.ஜி.வினய் நில அளவை மற்றும் தீர்வுத் துறை இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மீன்வளத் துறை ஆணையரும் தமிழ்நாடு மீன்வள மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநருமான ஜெ.ஜெயகாந்தன் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையராகவும், அரியலூர் மாவட்ட ஆட்சியர் டி.ரத்னா சமூக நலத்துறை இயக்குநராகவும், தமிழ்நாடு உப்பு கழக நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வி.அமுதவல்லி ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்ட இயக்குநர் மற்றும் திட்ட இயக்குநராகவும், மின் ஆளுமை குறைதீர் மையத்தின் சிறப்பு அதிகாரி கே.எஸ்.கந்தசாமி பால் உற்பத்தி மற்றும் பால்வள மேம்பாட்டு இயக்குநர் மற்றும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு மேலாண்மை இயக்குநராகவும், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை முன்னாள் இயக்குநர் டி.பாஸ்கரபாண்டியன் மாநில வளர்ச்சி கொள்கைக் குழு உறுப்பினர் செயலராகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

மேல்படிப்பு விடுமுறை முடித்து திரும்பியுள்ள அன்சுல் மிஸ்ரா சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) உறுப்பினர் செயலராகவும், நில நிர்வாக கூடுதல் ஆணையர் மரியம் பல்லவிபல்தேவ் தமிழ்நாடு மகளிர்மேம்பாட்டுக் கழக மேலாண்மைஇயக்குநராகவும், வேளாண்மைத்துறை இயக்குநர் வி.தட்சிணாமூர்த்தி தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றல் வாரிய மேலாண்மை இயக்குநராகவும், தஞ்சாவூர் ஆட்சியர் எம்.கோவிந்தராவ், தமிழ்நாடு குடிசை மாற்றுவாரிய மேலாண்மை இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை முன்னாள் செயலாளர் எஸ்.விஜயராஜ் குமார், சென்னைப் பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றல் வாரிய மேலாண்மை இயக்குநராகவும், பொதுத் துறை (தேர்தல்) இணை தலைமைத் தேர்தல் அதிகாரி அஜய்யாதவ் தமிழ்நாடு எலெக்ட்ரானிக்ஸ் கழக மேலாண்மை இயக்குநராகவும், பொதுத் துறை (தேர்தல்)இணை தலைமைத் தேர்தல் அதிகாரி டி.ஆனந்த் மாநில தொழிற்சாலைகள் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநராகவும், உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை இணை செயலாளர் டி.மணிகண்டன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிக் கழக மேலாண்மை இயக்குநராகவும், மதுரை மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பி.பிரியங்கா தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழக செயல் இயக்குநராகவும், சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் எஸ்.ஜெ.சிரு தமிழ்நாடுவீட்டு வசதி வாரிய மேலாண்மைஇயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள் ளனர். இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x